இலவெண்டர் எண்ணெய் உங்கள் வீட்டில் இருந்தால் இவற்றிற்கு நீங்கள் பயன்படுத்தலாம்.
சந்தையில் பல வகையான எண்ணெய்கள் உள்ளன. அதில் ஒன்று தான் லவெண்டர் எண்ணெய். இது தலைமுடிக்கு, மற்றும் முகம் போன்றவற்றிற்கு பாவிப்பது வழக்கம். இன்று நாம் இந்த எண்ணெய் ஒரு மனிதனுக்கு எவ்வாறு பயன்படுகிறது என்று பார்ப்போம்.
மன அழுத்தம் குறைய
லாவண்டர் எண்ணெயில் மனிதனுக்கு ஏற்படும் பதட்டம் மற்றும் மன அழுத்தம் போன்ற பிரச்சனைகளை தீர்க்கும் பண்புகள் இந்த எண்ணெயில் உள்ளது. மேலும் இதன் கூட தேயிலை மர செக்கு எண்ணெயை கலந்து பயன்படுத்தினால் இதனுடைய நன்மைகள் அதிகமாக இருக்கும்.
தூக்கம் வர எளிய வழிகள்:
மன அழுத்தம், பதட்டம் ஆகியவை நீங்கி நித்திரைக்கும் மேலும் இது அரோமாதெரபிக்கும் பயன்படுகிறது. இந்த எண்ணெய் உடலையும் ரிலாக்சாக வைக்க உதவும். லாவண்டர் எண்ணெயை தூங்கும் முன் தலையணையின் இருபுறமும் 2 தொட்டு விட்டு தூங்கினால் நன்றாக தூங்குவீர்கள்.
தலைவலி நீங்க:
உங்களுக்கு தலை வலி ஏற்பட்டால் உடனே மருந்து மாத்திரைகளை வாங்குவீர்கள் அதனை தவிர நிறைய வகையான தைலத்தை வாங்கி தடவுவீர்கள். அந்த தைலம் மொத்தம் தீர்ந்து விடும். ஆனால் இந்த லாவண்டர் எண்ணெயை ஒரு சொட்டு நெற்றியில் தேய்த்து கொண்டால் தலை வலி நீங்கி விடும்.
முக அழகிற்கு நல்லது:
லாவண்டர் எண்ணெய் முக அழகிற்கு பெரிதும் உதவுகிறது இந்த எண்ணெயை நேராக முகத்திற்கு அப்ளை செய்யக்கூடாது. லாவண்டர் எண்ணெயை மாய்ஸ்சரைசருடன் கலந்து தடவலாம் மேலும் ஏதாவது முகத்திற்கு Face Pack போட்டால் அதனுடன் கலந்து தடவலாம். இதன் மூலம் முகம் மிருதுவாக இருக்கும். மேலும் தேவையில்லாமல் பருக்கள் வருவதை தவிர்க்கும்.
ஆகவே நீங்களும் இனி சந்தைக்குச் சென்றால் ஒரு குப்பி லவெண்டர் எண்ணெய்யை வாங்கி உங்களுடன் வைத்துக்கொள்ளுங்கள்.