இளைய தலைமுறையினரே நீங்கள் உடலில் பச்சை குத்தி உடலை அலங்கரிப்பதால் உண்டாகும் தீமைகள்.
#ஆரோக்கியம்
#இளைஞன்
#அன்டனி
#தேவராஜ்
#அன்டனி தேவராஜ்
#Health
#Young
#Antoni
#Theva
#Antoni Thevaraj
Mugunthan Mugunthan
2 years ago

இன்றைய தலைமுறையினர் அனைவருமே பச்சை உடலின் எல்லாப் பகுதிகளிலும் குத்திக்கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர் .. இது சரியா அல்லது தவறா என்று எண்ணுவதலிலும் இதனால் உண்டாகும் உடலுக்குக்கான கேடுகள் பற்றி ஆராய்வதே இன்றைய பதிவு.
பச்சை குத்துதல் தீமைகள்:
- பச்சை குத்துவது என்பது ஊசியை கொண்டு குத்துவார்கள். ஆனால் அது ஒரு ஆளுக்கு மட்டும் ஒரு ஊசியை பயன்படுத்தலாம் ஆனால் அப்படி செய்வதில்லை அனைவருக்குமே ஒரு ஊசியை வைத்து குத்துவதால் தொற்றுகள் உருவாகும்.
- பச்சை குத்துதலில் நிறைய பாதரசம் கலந்த ரசாயணங்கள் பயன்படுத்துகின்றன. அது புற்றுநோயை உண்டாக்கும். அதுமட்டுமில்லாமல் கலர் சாயம் பூசப்பட்ட ரசாயனம் ஆறுவதற்கு நிறைய நாட்கள் எடுக்கும்.
- அதேபோல் அந்த மருந்துகள் சிலரின் உடலுக்கு ஒவ்வும் சிலர் உடலுக்கு ஒவ்வாது அதனால் காய்ச்சல் ஏற்படும்.
- இப்போது காலகட்டத்தில் பச்சை குத்தும் இடமானது அதற்கென்ற இடம் அல்லது அந்த இடம் பச்சை குத்துவதை தாங்குமா என்று சோதனை செய்தால் மட்டுமே அங்கு பச்சை குத்துவார்கள். அதைவிட்டு அந்தரங்கமான இடங்களிலெல்லாம் குத்துவது ஆபத்தானது.
ஏற்கனவே பச்சை குத்தியிருந்தால் அழிக்க மருந்து:
- பச்சை குத்துவதை நீக்க சித்ரமூலி வேரை அரைத்து பச்சை மேல் போட்டால் புண் உருவாகும் பின்னர் பச்சை திரவம் வெளியேற்றப்படும்.
- பருப்பை அரைத்து பச்சை குத்தியது மேல் பற்றுப்போட்டால் பச்சை குத்திய இடம் போல் இருக்காது.
- சிரட்டைத் தைலமும் கொண்டு பச்சை குத்திய இடத்தில் போடுவதால் பச்சை மறைந்து விடும்.
எனவே உங்கள் நலனுக்காகத் தன்னும் இதனை ஆமோதித்து பச்சை குத்துதலை நிறுத்துங்கள். பெற்றோர் மற்றும் அறங்காவலர்களும் இதனை கவனத்திற் கொள்ளவது எதிர்கால சந்ததியினரின் ஆரோக்கிய வாழ்விற்கு வழி வகுக்கும்.




