செவ்வாழையின் நன்மைகள்
செவ்வாழைப்பழத்தில் பீட்டா கரோட்டீன் மற்றும் வைட்டமின் ‘சி’ அதிகமாக உள்ளன. பீட்டா கரோட்டீன் தமனிகள் தடிமனாவதைத் தடுக்கும். மற்றும் உடலை இதய நோய், புற்றுநோயின் தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பளிக்கும். பீட்டா கரோட்டீன் உடலுக்கு மிகவும் இன்றியமையாதது. இது உடலுக்குள் செல்லும்போது வைட்டமின் ‘ஏ’வாக மாற்றப்பட்டு, கண்களின் ஆரோக்கியத்தையும், நோய் எதிர்ப்பு மண்டலத்தின் வலிமையையும் சருமத்தின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.
நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. செவ்வாழையில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. சிறுநீரகக் கற்கள் உருவாவதைத் தடுக்கும். உடலில் கால்சியம் உறிஞ்சுவதை அதிகரித்து, எலும்புகளின் ஆரோக்கியத்தையும் வலுப்படுத்தும். சிறுநீரகப் பிரச்னைகளில் இருந்து தற்காத்துக்கொள்ள வேண்டும் என்றால் தினம் ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிடலாம்.
சொறி, சிரங்கு, தோலில் வெடிப்பு போன்ற சரும வியாதி களுக்கு இது மிகச்சிறந்த தீர்வு.
இயற்கையாக அன்டாசிட் தன்மை கொண்டதால் நெஞ்செரிச்சல் பிரச்னை நீங்கும். எப்போதும் சோம்பலாக இருப்பவர்களுக்கு, இப்பழம் சிறந்த அருமருந்து.