தினமும் ஓட்ஸ் சாப்பாட்டிற்கு பயன்படுத்துவதால் ஏற்படும் பக்க விளைவுகள்.

#ஆரோக்கியம் #உணவு #அன்டனி #தேவராஜ் #அன்டனி தேவராஜ் #Health #Food #Antoni #Theva #Antoni Thevaraj
தினமும் ஓட்ஸ் சாப்பாட்டிற்கு பயன்படுத்துவதால் ஏற்படும் பக்க விளைவுகள்.

மிகவும் வேகமாக நகரும் காலகட்டத்தில் அனைவரும் எளிதான முறையில் செய்யக்கூடிய சாப்பாட்டையே பெரிதும் பயன்படுத்துகின்றனர். அந்த வகையில் ஓட்ஸும் ஒன்றாகும்.

ஓட்ஸை சாப்பிடுவதால் அதிக நார்ச்சத்தும், தாவர கனியுப்புக்களும் கிடைக்கின்றன. ஆயினும் தினமும் அவசரத்திற்கு சாப்பிட இது உகந்ததல்ல. அப்படிச்சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகளைத்தான் இன்று பார்க்கின்றோம்.

ஓட்ஸ் என்றால் என்ன?

ஓட்ஸ் Avena Sativa என்ற தாவரத்தில் இருந்து விளைவிக்க கூடிய உணவுப்பொருட்கள் ஆகும். இந்த ஓட்ஸை பயிரிடுவதற்கு குறைந்த அளவு தண்ணீர் மற்றும் குறைந்த அளவு உரம் இருந்தால் போதுமானது. அதிக ஈரப்பதம் உள்ள இடத்தில் இந்த ஓட்ஸ் விளைவிக்க படுகிறது.

ஆரம்ப காலகட்டத்தில் ஓட்ஸை அதிக அளவு விலங்குகளுக்கு மட்டுமே உணவாக கொடுத்து வந்தனர். அதன் பிறகு ஓட்ஸில் இருக்கும் சத்துக்கள் தெரியவந்ததும் மக்கள் அதை அதிகமாக சாப்பிட்டு வருகின்றனர். அந்த அளவுக்கு ஓட்ஸில் அதிக அளவு சத்துக்கள் நிறைந்து இருக்கின்றன.

ஓட்ஸ் சாப்பிடுவதால் ஏற்படும் பக்கவிளைவுகள்:

  • ஓட்ஸ் சாப்பிடுவதில் அல்லது விழுங்குவதில் சிரமம் ஏற்பட்டால் அதனை சாப்பிடாமல் இருப்பது நல்லது.
     
  • ஓட்ஸை சாப்பிடும் போது நன்றாக மென்று சாப்பிட வேண்டும். அப்படி சாப்பிடவில்லை என்றால் நம்முடைய குடல் அமைப்பில் பாதிப்பு வர வாய்ப்பு இருக்கிறது.
     
  • அது மட்டும் இல்லாமல் ஓட்ஸை தொடர்ந்து சாப்பிட கூடாது. ஒரு வேளை அப்படி தொடர்ந்து சாப்பிட்டால் உணவுக்குழாய், வயிறு மற்றும் குடல் சம்மந்தமான சமிபாட்டு மண்டலத்தில் பிரச்சனைகள் வரக்கூடும்
     
  • தினமும் ஓட்ஸை நாம் சாப்பிடும் போது பசி எடுக்காது. பசி உணர்வு இல்லாமல் ஆகிவிடும். 
     
  • உதாரணமாக ராகி, கேழ்வரகு, கம்பு சாப்பிடுபவர்கள் அதனுடன் ஒப்பிடும்போது ஓட்ஸில் குறைந்து அளவு மட்டுமே சத்துக்கள் உள்ளன.

ஆகவே ஓட்ஸை நாம் அளவோடு சாப்பிட வேண்டும். அப்படி சாப்பிட்டால் தான் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!