இரவில் தாமதமாக நித்திரைக்குச் செல்லும் வழக்கமுடையவரா நீங்கள் ? அப்படியாயின் இது உங்கள் கவனத்திற்கு....

#ஆரோக்கியம் #துாக்கம் #அன்டனி #தேவராஜ் #அன்டனி தேவராஜ் #Health #sleep #Antoni #Theva #Antoni Thevaraj
இரவில் தாமதமாக நித்திரைக்குச் செல்லும் வழக்கமுடையவரா நீங்கள் ? அப்படியாயின் இது உங்கள் கவனத்திற்கு....

நம்மில் உயர் கல்விகற்போரும், உயர் பதவி வகிப்போரும் தினமும் இரவில் தாமதமாக துாக்கத்திற்கு செல்லும் வழக்கத்தினை கொண்டிருப்பர். அப்படியானோர் தாமதமாக இரவில் துாக்கத்திற்கு செல்வதால் ஏற்படும் விளைவுகள் பற்றி இன்று ஆராயலாம்.

இரவு தாமதமாக தூங்குவதால் வரும் நோய்கள்:

தினமும் இரவு தாமதமாக தூங்குவதை வழக்கமாக வைத்திருப்பவர்களுக்கு இதய நோய் மற்றும் சர்க்கரை நோய் வர வாய்ப்புகள் உள்ளதாக ஆய்வு கூறுகிறது. நம்முடைய அன்றாட வாழ்க்கை இயந்திர தனமாக மாறிவிட்டது.

காலையில் வேலைக்கு சென்று இரவில் வீடு திரும்புவோம் .பின்பு ,சாப்பிட்டு வேலைகளை முடித்தவுடன் போன் பயன்படுத்துவோம் இல்லையென்றால் டிவி பார்ப்போம்.சீலர் இரவு வெகுநேரம் விழித்து சீரிஸ் பார்ப்பதை வழக்கமாக வைத்திருப்பார்கள்.

அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் உள்ள ரட்ஜர்ஸ் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு ஒன்று மேற்கொண்டார்கள். அதில்,இரவு தொடர்ந்து தாமதமாக தூங்குவதை வழக்கமாக வைத்திருப்பவர்களுக்கு டைப் 2 நீரிழிவு நோய்,இதய நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக ஆய்வின் முடிவு கூறுகிறது. இது இரவு சீக்கிரம் தூங்கி அதிகாலையில் எழுதிருப்பவர்களுடன் ஒப்பிடுகையில் இது கூறப்படுகிறது.

அதிகாலையில் எழுபவர்களுக்கு பல நன்மைகள் உள்ளன அதில் சிலர் அதிகாலையில் எழுபவர்கள் கொழுப்பை ஆற்றலாக பெறுகின்றனர். நீண்ட நேரம் சுறுசுறுப்பாக மற்றும் மிகுந்த ஆற்றலுடன் இருப்பார்கள்.அதாவது இரவில் கொழுப்பு மிகவும் எளிதாக உருவாகும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இரவு தாமதமாக தூங்குபவர்களுக்கு இன்சுலின் உற்பத்தி குறைவாக உள்ளது. இது நீரிழிவு மற்றும் இதய நோய்கள் ஏறுபடுவதற்கு வாய்ப்புள்ளது என்கின்றனர் . மேலும் இந்த ஆராய்ச்சி மருத்துவர்களுக்கும் உதவியாக இருக்கும் என்று கூறுகின்றனர். உணவு,எடை குறைப்பு,தூக்க முறை பற்றி நிறைய ஆய்வுகள் உள்ளன.

இரவில் வெகுநேரம் விழித்திருப்பவர்கள் ஸ்நாக்ஸ் எடுத்துக் கொள்கின்றனர். அதேநேரம் அதிகாலையில் எழுபவர்கள் நடைபயிற்சி, யோகா செய்ய அதிக வாய்ப்பு உள்ளது. உணவு,உடற்பயிற்சி,உடல் பருமன்,சர்க்கரை நோய் ,உயர் இரத்த அழுத்தம் மற்றும் பிற காரணங்களால் இதய ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது என்று மேக்ஸ் ஹெல்த்கேரின் இருதய அறிவியல் முதன்மை இயக்குநர்,எய்ம்ஸ் மருத்துவர் வி.கே.பால் கூறுகிறார்.

ஆராய்ச்சியாளர்கள் நடுத்தர வயது கொண்ட 51 நபர்களை 2 குழுக்களாகப் பிரித்து ஆய்வு செய்தனர். தூக்கம் மற்றும் பழக்கவழக்கங்களை வைத்து ஆய்வு மேற்கொண்டனர்.இரவில் தாமதமாக தூங்குபவர்கள் உடல் பருமன்,டைப் 2 நீரிழிவு நோய்,இதய நோய்க்கான அதிக வருவதற்கான அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறுகின்றனர். இது இரவு சீக்கிரம் தூங்கி எழுபவர்களை ஒப்பிடுகையில் என்று பேராசிரியர் மாலின் கூறினார்.

சீக்கிரம் தூங்குபவர்கள், தாமதமாக தூங்குபவர்கள் இடையே கொழுப்பு வளர்சிதை மாற்றம் ஏற்படுகிறது. நமது உடலின் சர்க்காடியன் ரிதம் (விழிப்பு / தூக்க சுழற்சி) நம் உடல்கள் இன்சுலினை எவ்வாறு பயன்படுத்துகிறது என்பதைக் காட்டுகிறது. இன்சுலின் ஹார்மோனுக்கு பதிலளிக்கும் ஒரு உணர்திறன் அல்லது பலவீனமான திறன் நமது ஆரோக்கியத்திற்கு பெரும் தாக்கங்களை ஏற்படுத்துகிறது என்று மாலின் கூறுகிறார்.

குளுக்கோஸ் அளவுகள் இயற்கையாகவே பகல் முழுவதும் வேலை செய்து இரவில் முற்றிலும் குறைந்த அளவில் இருக்க வேண்டும். ஆனால் தாமதாக தூங்குபவர்கள் உறங்குவதற்கு சற்று முன் சாப்பிடுவதால், அது குளுக்கோஸ் அளவை அதிகரிக்கிறது. இது இயல்பான உயிரியல் செயல்முறையைப் பின்பற்றாததால் வளர்சிதை மாற்றத்தை எதிர்மறையாக பாதிக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!