தலை முடி உதிரலை எவ்வாறு இயற்கையான முறையில் உணவுகள் மூலம் தடுக்கலாம்.

#ஆரோக்கியம் #உணவு #அன்டனி #தேவராஜ் #அன்டனி தேவராஜ் #Health #meal #Antoni #Theva #Antoni Thevaraj
தலை முடி உதிரலை எவ்வாறு இயற்கையான முறையில் உணவுகள் மூலம் தடுக்கலாம்.

உள்ளங்கையில் விரல்கள் ஐந்தும் ஒரே மாதிரி இருப்பதில்லை. அது போல் நம் அனைவருக்கு தலை முடி ஒவ்வொரு மாதிரியிருக்கும். சிலருக்கு நீண்டு அடர்த்தியாகவும். சிலருக்கு முடி உதிர்ந்து மொட்டையாகவும் இருக்கும்.

இவ்வாறனவர்கள் தமது முடி உதிராதிருக்க பல்வேறு முறைகளைக் கையாள்வர். எனினும் இதற்கு தகுந்த சரியான இயற்கை வழி நல்ல போசாக்கான உணவு வகைகளை உண்ணுதலாகும். அப்படி உண்ணும் உணவையே நாம் இன்று பார்க்கவிருக்கின்றோம். 

கரட்:

கரட் -ல் வைட்டமின் A சத்துக்கள் அதிகம் இருப்பதால் இது முடி உதிர்வை தடுக்க உதவுகிறது. கரட்டில் அதிக அளவு பீட்டா கரோட்டின் சத்துக்கள் உள்ளன. அதனால் இது முடி உதிர்வை தடுத்து வளர்ச்சியையும், முடியை வலிமையாகவும் வைக்க உதவுகிறது.

பீன்ஸ் 

பீன்ஸ் பல வகைகளில் உள்ளது. இந்த பீன்ஸில் புரதம் மற்றும் நார்ச்சத்து, வைட்டமின் B மற்றும் வைட்டமின் C, துத்தநாகம் உள்ளிட்ட தாது உப்புக்கள் அதிகம் இருப்பதால் இது முடி உதிர்வை தடுக்க உதவுகிறது. பீன்ஸ் முடி உதிர்வை தடுப்பது மட்டுமல்லாமல் முடி வளர்ச்சியை அதிகரிக்கவும் உதவுகிறது.

முட்டை:

முட்டையில் உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் உள்ளது. முட்டையில் புரோட்டீன், வைட்டமின் B12, இரும்புச்சத்து, துத்தநாகம், ஒமேகா கொழுப்பு அமிலங்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன. இவை முடி உதிர்வை தடுக்க உதவுகிறது.

பசளைக் கீரை 

பசளைக் கீரை அதிக ஊட்டச் சத்துக்களை கொண்டுள்ளது. இதில் இரும்புச்சத்து, வைட்டமின் A மற்றும் வைட்டமின் C, புரதம் போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகம் காணப்படுகின்றன. மேலும், பசலைக் கீரை தலையில் உள்ள எண்ணெய்ச் சுரப்பியைத் தூண்ட செய்கிறது. இது முடி உதிர்வை கட்டுப்படுத்துகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!