TNPSC குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு

#Examination #exam
Mani
1 year ago
TNPSC குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு

TNPSC Group 4 Result 2023: குரூப் 4 தேர்வு நடந்து 8 மாதங்கள் ஆன நிலையில், தேர்வு முடிவுகள் இன்று வெளியாக வாய்ப்பு உள்ளதாக டிஎன்பிஎஸ்சி வட்டாரத்தில் இருந்து தகவல் கசிந்தது. இதுகுறித்து ABP Nadu-ல் செய்தி வெளியான நிலையில், தற்போது தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. 

இதற்கிடையே குரூப் 4 தேர்வுகளுக்காக 7,301 பேரை தேர்வு செய்வதற்கான அறிவிப்பு, கடந்த ஆண்டு மார்ச் மாதம் 30-ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. தேர்வு, கடந்த ஜூலை 24ஆம் தேதி அன்று நடத்தப்பட்டது. சரியாக 8 மாதங்கள் ஆன நிலையில் இதுவரை தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை. 

மார்ச் மாதத்தில் ஒரு வாரம் ஆகியும் தேர்வு முடிவுகள் வெளியாகாத நிலையில், ’’தமிழக அரசுப்பணியாளர் தேர்வாணையம் மாற்றுத் திறனாளிகள், ஏழைத் தேர்வர்களை மன உளைச்சலுக்கு உள்ளாக்காமல்  குரூப்4 தேர்வு முடிவை உடனே வெளியிட வேண்டும்’’ என்று தேர்வர்கள் தெரிவித்தனர். இதுதொடர்பாக  #WeWantGroup4Results என்னும் ஹேஷ்டேக் மார்ச் 8 அன்று இந்திய அளவில் முதலிடத்தில் ட்ரெண்டானது. 

இதற்கிடையில் குரூப் 4  அரசுப் பணிகளுக்கு கூடுதலாகப் பணியிடங்கள் சேர்க்கப்பட்டன. இதன்படி, விஏஓ எனப்படும் கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்கள் 274-ல் இருந்து 425 ஆக அதிகரிக்கப்பட்டது. இளநிலை உதவியாளர், வரித் தண்டலர் உள்ளிட்ட பணிகளுக்கான மொத்த பணியிடங்கள் 3593-ல் இருந்து 4,952 ஆகவும், தட்டச்சர் காலியிடங்களின் எண்ணிக்கை 2,108-ல் இருந்து 3311 ஆகவும் அதிகரிக்கப்பட்டது.

அதேபோல சுருக்கெழுத்தர் தட்டச்சர் பணிக்கான காலியிடங்களின் எண்ணிக்கை 1,024-ல் இருந்து 1176 ஆகவும் அதிகரிக்கப்பட்டது.

இந்த நிலையில் தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன. தேர்வர்கள் ttps://www.tnpsc.gov.in/ என்ற இணைய முகவரியை க்ளிக் செய்து, தேர்வு முடிவுகளை அறியலாம்.