கறிகள் வைப்பதற்கு பயன்படும் தேங்காய்ப் பூவின் நன்மைகள் என்ன தெரியுமா?
நமது முன்னோர்கள் ஆரோக்கியமாக உண்டு தம்முயிர்களை காப்பாற்றினர். ஆனால் இப்போது மருந்து மாத்திரைகளை உட்கொண்டு மேலும் நோய்களை வரவழைக்கின்றனர். ஆந்தக்காலத்து ஆரோக்கிய உணவில் தேங்காய்ப் பூவும் ஒன்றாகும். இதன் நன்மைகளை ஆராய்வதே இன்றைய பதிவாகும்.
சமிபாட்டு கோளாறுகள் நீங்க:
தேங்காய் பூவில் நோய் எதிர்ப்பு சக்தியை 2 மடங்காக அதிகரிக்கும் பண்புகள் இருக்கின்றன. இது செரிமான கோளாறுகளை சரி செய்கிறது.
மேலும் தேங்காய்ப் பூவில் ஆன்டி ஆக்ஸிடென்டுகள் அதிகமாக காணப்படுகின்றன. அதனால் விரைவில் முதுமை அடைவதைத் தடுத்து இளமையாக வைத்து கொள்கிறது. அதுமட்டுமில்லாமல் தோலில் சுருக்கங்கள், வயதான தோற்றம், சருமத் தொய்வு போன்ற பிரச்சனைகளை குணப்படுத்துகிறது.
தேங்காய் பூவில் இருக்கும் சத்துக்கள் புற்றுநோய் செல்களைத் தூண்டும் ஃப்ரீ ரேடிக்கல்ஸ் -யை (Free Radicals) நம்முடைய உடலில் இருந்து வெளியேற்றும் ஆற்றலை கொண்டுள்ளது. மேலும் இது புற்றுநோய் செல்களை அழிக்கிறது
தைராய்டு பிரச்சனைக்கு:
தைராய்டு பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள் தேங்காய்ப் பூவை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தைராய்டு பிரச்சனையை சரி செய்யலாம். இதில் இருக்கும் சத்துக்கள் தைராய்டு சுரப்பை குணப்படுத்துகிறது.
மேலும் இதில் கலோரிகள் குறைவாக இருப்பதால் இது உடல் எடையை குறைக்க உதவுகிறது. உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் தேங்காய் பூவை சாப்பிடலாம். மேலும் இது மாதவிடாய் கோளாறுகளை குணப்படுத்துகிறது. .
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த:
தேங்காய் பூவில் பல சத்துக்கள் காணப்படுகின்றன. அதனால் இதயக் குழாய்களில் படிகிற கொழுப்புகளை நீக்குகிறது. இதனால் மாரடைப்பு மற்றும் பிற இதயக் கோளாறுகளில் இருந்தும் நம்மை பாதுகாக்கிறது.
சிறுநீரகத்திற்கு
அதுமட்டுமில்லாமல் தேங்காய் பூவில் இருக்கும் சத்துக்கள் சிறுநீரக கோளாறுகளை சரிசெய்கிறது. மேலும் உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றி சிறுநீரகத்தைப் பாதுகாக்கிறது.
சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த:
தேங்காய் பூ சர்க்கரை நோயாளிகளுக்கு கண்கண்ட மருந்தாக இருக்கிறது. காரணம் தேங்காய் பூ இன்சுலின் சுரப்பை தூண்டி இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகிறது.