வெற்றிலையில் இவ்வளவு நன்மைகள்!
பல காலங்களுக்கு முன்னர், மதிய உணவிற்குப் பிறகு, வெற்றிலைப் போடுவது வழக்கமாக இருந்தது. இது தமிழர்களின் மிக முக்கிய பண்பாட்டு வழக்கம். இதன் மூலம் பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும் என்பது தான் நிதர்சனமான உண்மை. வெற்றிலையில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி1, வைட்டமின் பி2, அயோடின், பொட்டாசியம் மற்றும் நிகோடினிக் அமிலம் போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகளவில் நிறைந்துள்ளது.
வெற்றிலையில் உள்ள சில பதார்த்தங்கள் செரிமான பிரச்சனைகள் மற்றும் அல்சர் போன்ற பிரச்சனைகளுக்கு நிவாரணம் அளிக்கிறது.
வெற்றிலை வயிற்றில் இருக்கும் வாயுவை வெளித்தள்ளும் தன்மை கொண்டது.
உடல் எடை அதிகரிப்பால், உடலில் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவானது அதிகமாக இருக்கும். இவர்கள் வெற்றிலையை சாப்பிடுவதன் காரணமாக, உடல் எடை குறைந்து ஆரோக்கியமாக இருக்கலாம்.
வெற்றிலையில் நல்லெண்ணெய் தடவி நெருப்பில் இலேசாக வாட்டி, நெற்றியில் ஒட்டி வைக்க ஒற்றைத் தலைவலி குணமாகும்.
வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு சேர்த்து மென்று சுவைப்பதால் அஜீரணக் கோளாறு நீங்கும்.
வெற்றிலையை கடுகு எண்ணெயில் போட்டு லேசாக சூடு செய்து மார்பில் வைத்துக் கட்டிவர மூச்சுத்திணறல் மற்றும் இருமலுக்கு நிவாரணம் கிடைக்கும்.
குழந்தைகளுக்கு மலச்சிக்கல் ஏற்பட்டால் வெற்றிலைக் காம்பை ஆமணக்கு எண்ணெயில் தொட்டு, ஆசனவாயில் செலுத்த உடனடியாக மலம் கழியும்.