நினைவாற்றலை அதிகரிக்கும் தன்மை கொண்ட சீதாப்பழம்
சீத்தாப்பழத்தில் வைட்டமின்கள், புரதம், தாது பொருட்கள், இனிப்பு, கொழுப்பு சத்து, நார்ச்சத்து என அனைத்தையும் கொண்டது.
சீத்தாப்பழத்தில் உள்ள தாதுப் பொருட்கள் நம் உடலிலுள்ள எலும்புகளுக்கும், தசைகளுக்கும், இருதயத்திற்கும் வலுவூட்டும். உடலில் தேவையற்ற சதை உள்ளவர்கள் தொடர்ந்து சீத்தாப்பழம் சாப்பிட்டு வர, தேவையற்ற சதைகள் கனிசமாக குறையும்.
ஊற வைத்த வெந்தயத்துடன் சீத்தாப்பழத்தை சாப்பிட்டு வந்தால் குடல் புண்கள் ஆறும்.
சீதாப்பழ மரத்தின் இலைகள் மருத்துவ குணம் கொண்டவை. இலைகளில் இருந்து தயாரிக்கப்பட்ட கசாயம் வயிற்றுப் போக்கை கட்டுப்படுத்துகிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு சீதாப்பழ இலை அருமருந்து. சீதாப்பழ மரத்தின் வேர் கருச்சிதைவை கட்டுப்படுத்துகிறது.
விதைகளை பொடியாக்கி சமஅளவு பொடியுடன் பாசிப்பயிறு மாவு கலந்து தலையில் தேய்த்து குளித்து வர முடி மிருதுவாகும்.
சீத்தாப்பழத்தை உட்கொண்டால் தலைக்கும் மூளைக்கும் செல்லும் ரத்த ஓட்டம் சீராகும். இதன் மூலம் குழந்தைகளின் கவனிக்கும் திறன், நினைவாற்றல் அதிகரிக்கும்.
சீதாப் பழத்துடன் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து சாப்பிட்டு வர, கொலஸ்ட்ரால் சேராமல் காக்கும். சீதாப்பழத்துடன், குங்குமப்பூ சேர்த்துச் சாப்பிட்டால் நோய் எதிர்ப்புச் சக்தி உண்டாகும்.