அனைவரும் விரும்பும் கொய்யாப்பழத்திலும் தீமைகள் உண்டு என்பது தெரியுமா உங்களுக்கு?
கொய்யாப்பழம் என்றால் எல்லோரினதும் வீட்டில் குறைந்தது ஒரு மரமாவது நிற்கும். கொய்யாப்பழத்தில் நிறைய நன்மைகள் உள்ளன. ஆயினும் அதிலும் தீமைகள் என்ன என்பது பற்றித்தான் இன்று பார்க்கப்போகிறோம்.
கொய்யாப்பழத்தில் வைட்டமின் A, வைட்டமின் B, வைட்டமின் C, பாஸ்பரஸ், கால்சியம், இரும்புச்சத்து, மாவுச்சத்து, புரதம், கொழுப்புச்சத்து மற்றும் நார்ச்சத்து ஆகிய 10 பத்து விதமான சத்துக்களும் நிறைந்து காணப்படுகிறது.
ஒரு நாளைக்கு 2 கொய்யா பழம் மட்டுமே சாப்பிட வேண்டும். அது தான் நமது உடலில் பக்க விளைவுகள் ஏற்படாமல் இருக்க உதவும்.
வாந்தி மயக்கம்:
கொய்யாப்பழத்தை அளவுக்கு அதிகமாக சாப்பிடும் போது வாந்தி மற்றும் மயக்கம் போன்ற பிரச்சனைகள் வரும்.
வயிற்று வலி:
அதேபோல இரவு நேரத்தில் கொய்யாப்பழம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஒருவேளை அப்படி நீங்கள் சாப்பிட்டால் வயிறு வலி பிரச்சனைகள் வரும்.
தொண்டை வலி:
கொய்யாப்பழம் சாப்பிட்டவுடன் தண்ணீர் குடிக்க கூடாது. ஏனென்றால் கொய்யா பழம் சாப்பிட்டவுடன் தண்ணீர் குடிக்கும் போது தொண்டையில் வலி ஏற்படும். அதனால் சிறிது நேரம் இடைவெளி விட்டு தான் தண்ணீர் குடிக்க வேண்டும்.
ஆஸ்துமா நோய்:
வாதம் மற்றும் ஆஸ்துமா போன்ற நோய் உள்ளவர்கள் கொய்யா பழத்தை மருத்துவரின் ஆலோசனை படி மட்டுமே சாப்பிட வேண்டும்.
இத்தகைய கொய்யா பழத்தை நாட்டு மருத்துவம் அல்லது சித்த மருத்துவத்தின் படி உடலுக்கு மருந்து எடுத்துக் கொள்பவர்கள் கொய்யா பழம் சாப்பிடாமல் இருப்பது நல்லது.
கொய்ய பழம் சாப்பிட கூடாதவர்கள்:
- குறைந்த அளவு இரத்த சர்க்கரை உள்ளவர்கள்
- வாதம் உள்ளவர்கள்
- ஆஸ்துமா உள்ளவர்கள்
- செரிமான கோளாறு பிரச்சனை உள்ளவர்கள்
- அலர்ஜி
மேல் சொல்லப்பட்டுள்ள நபர்கள் மருத்துவரின் ஆலோசனை படியே கொய்யாப்பழம் சாப்பிட வேண்டும்.