உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள உதவுவதில் நுங்கும் ஒன்றாகும்.
நுங்கில் வைட்டமின் பி, சி, இரும்புச்சத்து, கால்சியம், துத்தநாகம், சோடியம், மக்னீசியம், பொட்டாசியம், தயமின், அஸ்பாரிக் அமிலம் மற்றும் புரதம் போன்ற சத்துக்கள் அதிகம் காணப்படுகின்றன.
நுங்கு என்பது பல வயிற்று கோளாறுகள் மற்றும் செரிமான பிரச்சனைகளுக்கு இயற்கையான தீர்வாக உள்ளது.
கொழுப்பை கட்டுப்படுத்தி உடல் எடையை குறைக்க உதவும்.
நுங்கை அரைத்து தேங்காய்ப்பாலுடன் சேர்த்து குடித்தால் வயிற்றுப்புண், அல்சர் குணமாகும்.
களைப்பாக உள்ள நேரத்தில் நுங்கு சாப்பிட்டால் உடனடியாக புத்துணர்வு கிடைக்கும்.
இளநீருடன் நுங்கை சேர்த்து ஜூஸாக செய்து குடிக்கலாம்.
நுங்கின் மேலுள்ள பழுப்பு நிறமான தோலில்தான் நார்ச்சத்து அதிகம் என்பதால் அதைச் சேர்த்துச் சாப்பிடுவதுதான் நல்லது.
நுங்கின்அதிகப்படியான நீர்சத்துக்கள் உள்ளதால் கோடை காலத்தில் நமது உடலை குளிச்சியாக வைத்துக் கொள்ள பெரிதும் துணை புரிகிறது.