காதலுக்கு வலை வீசி தொழிலதிபரிடம் 20 லட்சம் ரூபாய் மோசடி செய்த ஆசிரியர்

#Tamilnews #Breakingnews #ImportantNews
Mani
1 year ago
காதலுக்கு வலை வீசி தொழிலதிபரிடம் 20 லட்சம் ரூபாய் மோசடி செய்த ஆசிரியர்

மும்பை செம்பூரில் வசிக்கும் டிராவல்ஸ் அதிபரின் மகன் ராஜேஸ் . இவர் கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணனை சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் தனது இன்ஸ்டாகிராம் தோழி லோரன் மூலம் அவரது சகோதரி ஹசல் ஜேம்ஸ் அறிமுகமானதாக கூறி உள்ளார்.

தனக்கு திருமணமாகவில்லை என்று கூறியதை நம்பி ராஜேஷ் காதலில் விழுந்துள்ளார். பின்னர் கணவர் இறந்து விட்டதாக கூறிய ஹசல், ஒரு கட்டத்தில் கணவரை பிரிந்து வாழ்வதாகவும் தனக்கு 2 குழந்தைகள் இருப்பதாகவும் அவர்களுடன் கஷ்டபடுவதாகவும் உருக்கமாக பேசி உள்ளார். திருமணம் செய்து கொள்ள போகிற பெண் தானே என்று ராஜேஷ் முதலில் 90 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்ததாக கூறப்பட்டுள்ளது.

அதன் தொடர்ச்சியாக தொழில் தொடங்க வேண்டும் என்று கூறி துணி மற்றும் அழகு சாதன பொருட்கள் ஸ்கோடா கார் என 20 லட்சம் ரூபாய்க்கு பல்வேறு பொருட்களை ராஜேஷிடம் இருந்து ஹசல் ஏமாற்றி வாங்கியதாகவும், அனைத்தையும் பெற்றுக் கொண்டு திருமணம் செய்ய மறுத்துள்ளார்.

தான் கொடுத்த பணத்தை திருப்பிக்கேட்ட போது உனக்கு 20 லட்சம் ரூபாய் கொடுப்பதற்கு பதில் கூலிப்படையினரிடம் 2 லட்சம் ரூபாய் கொடுத்தால் உன்னை தீர்த்துக் கட்டி விடுவார்கள் என்று ஹசல் மிரட்டியதாகவும், ஹசல் தற்போது வேறு ஒருவருடன் பழக்கத்தில் இருப்பதாகவும், ஹசலின் இந்த மோசடிக்கு அவரது சகோதரர், தந்தை என குடும்பமே உடந்தையாக இருப்பதாகவும் குற்றஞ்சாட்டி இருந்தார்.

இந்த புகார் தொடர்பாக போத்தனூர் போலீசார் விசாரித்தனர். கோவை காவல் அதிகாரி ஒருவரின் மகனை காதலித்து திருமணம் செய்து கொண்ட ஹசலுக்கு இரு குழந்தைகள் உள்ள நிலையில் காதல் கணவரை மதம் மாறச்சொன்னதால் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதும், நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு நடந்து வருவதும் தெரியவந்தது.ராஜேஸிடம் இருந்து ஹசல், தனது தந்தையின் வங்கி கணக்கில் மோசடியாக பணம் பெற்றதும், சகோதரர் பெயரில் ஸ்கோடா கார் வாங்கியதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக இண்ஸ்டா காதல் இம்சை அழகி ஹசல் ஜேம்ஸ், அவரது குடும்பத்தினர் மீது மோசடி, கொலைமிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ள போத்தனூர் போலீசார் தலைமறைவான ஹசலை தேடிவருவதாக கூறினர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!