ஆரோக்கியமென கூறப்படும் அதிக காரமுள்ள உணவை எடுப்பதால் உண்டாகும் உடற்சீர்கேடுகள்.
சுவையானது நபருக்கு நபர் வேறுபடும். சிலர் அதிகம் காரமுள்ள சாப்பாட்டை விரும்புவர். சிலர் காரமற்ற வெள்ளைக்கறி சாப்பாட்டை விரும்புவர். இதிலே இந்த காரமுள்ள சாப்பாட்டை விரும்பி, அதிகமாக காரம் சாப்பிட்டாலே திருப்தியடைவோரின் உடல் நிலைக்கேற்படும் தீங்குகளையே பார்க்கவிருக்கிறோம்.
அதிகம் காரம் சாப்பிடுதலால் ஏற்படும் இந்த பாதிப்பானது தொண்டையில் இருந்து தொடங்கி மலத்துவாரம் வரை பிரச்சனைகளை உருவாகின்றது. கார உணவுகளை எடுப்பதில் நல்ல விஷங்களும் இருக்குறது அதே சமயம் அதில் அதிக பாதிப்புகளும் இருக்கிறது.
அதிகமாக கார உணவுகளை நாம் சாப்பிடும் பொழுது கண்ணில் இருந்து தண்ணீர் வருவது, மூக்கி இருந்து தண்ணீர் வருவது காதுகள் சிவந்து போவது போன்ற பிரச்சனைகள் அதிகமாக இருக்கும்.
அதிகமாக காரவகைகளை எடுத்து கொள்ளும் பொழுது மூலம் நோய் வருவதற்கும் காரணமாக இருக்கிறது. இந்த மூலம் நோயானது ஆசனவாயிலும் கீழ் மலக்குடல் அல்லது அதன் வெளியில் உள்ள நிரம்புகள் வீக்கம் அடையும் பொழுது இது போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது.
இந்த பிரச்சனையானது நாளடைவில் மலச்சிக்கல், வயிற்று போக்கு, கழிவறையில் அதிக நேரம் செலவிடுவதால் ஏற்படும் வலி, செரிமான கோளாறு, போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதால் மூலம் நோய்க்கான அறிகுறிகள் என்றும் சொல்லப்படுகிறது.
மூலம் நோய்க்கு முக்கிய காரணம் நாம் சாப்பிட கூடிய உணவு பழக்கவழக்கங்களில் ஏற்பட கூடிய மாற்றம் தான், காரமான உணவுகள் மூல நோயை உண்டாக்கவில்லை என்றாலும் மூல நோயை உருவாக்க கூடிய காரணமாக இருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது.
காரம் அதிகம் சாப்பிட்ட பிறகு அதிகமாக தண்ணீர் குடிப்பது மிகவும் அவசியம், அப்படி தண்ணீர் அதிகமாக எடுத்துக்கொள்ள வில்லை என்றால் ஆசனவாயில் எரிச்சல்கள், மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும் என்று சொல்லப்படுகிறது.
அதிகமாக காரத்தை எடுத்து கொள்ளும் பொழுது நெஞ்சு எரிச்சல், வயிற்று எரிச்சல் போன்ற பிரச்சனைகள் உண்டாகி, கொஞ்சம் கொஞ்சமாக வயிற்றில் புண்கள் ஏற்படுவதற்கும் காரணமாக இருக்கிறது.
இதை விட கார உணவுகளை சாப்பிடுபவர்களுக்கு அதிகமாக கோவம் வரும் என்றும் சொல்லப்படுகிறது. அதேபோல் கர்ப்பிணி பெண்களுக்கும் கார உணவுகளை கொஞ்சம் தவிர்ப்பது நல்லது. எனவே கார உணவு வகைகளை கொஞ்சமாக எடுத்துக்கொள்வது நல்லது.