நாம் தினமும் அருந்தும் பாலைவிட கால்சியம் அதிகம் உள்ள தானியம் இதுவென்பது உங்களுக்குத் தெரியுமா?

#ஆரோக்கியம் #உணவு #அன்டனி #தேவராஜ் #அன்டனி தேவராஜ் #Health #Food #Antoni #Theva #Antoni Thevaraj
நாம் தினமும் அருந்தும் பாலைவிட கால்சியம் அதிகம் உள்ள தானியம் இதுவென்பது உங்களுக்குத் தெரியுமா?

நாம் தினமும் பால் அருந்துவது நமக்கு தேவையான சக்தியையும் கல்சியத்தையும் வழங்கவல்ல ஒரே ஒரு பொருளாகையால் ஆகும். ஏனையவற்றில் ஏதாவததொரு ஊட்டச்சத்து குறைவாக இருக்கும். அதனாலேயே நாம் ஆரோக்கியத்திற்கும் சுவைக்கும் சமைக்கும் போது அனைத்துப்பொருட்களையும் சேர்க்கின்றோம்.

ஆகவே இந்த அனைத்துப் பொருட்களையும் சேர்த்து செய்யாதவிடத்தில் ஏற்படும் குறைகாரணமாக உடலில் ஏதேனும் குறைகள் ஏற்பட வாய்ப்புண்டு. எனவே இன்றைய பதிவில் நாம் துவரம் பருப்பின் ஆரோக்கியத்தினை பார்க்கவுள்ளோம்.

துவரம் பருப்பு நன்மைகள்:

துவரம் பருப்பு தினமும் நாம் குடிக்கும் பாலைவிட 6 மடங்கு சத்துக்கள் நிறைந்துள்ளது. இது இந்தியர்களுடைய கலாச்சரத்தில் நீண்ட தொடர்பு கொண்டது. இது 2020 நிலவரப்படி உலக உற்பத்தியில் 77% இந்திய மக்களால் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது.

கி.பி. 300 முதல் கி.பி., 400 ஆம் ஆண்டு காலத்தை சேர்ந்த கதாதப்சதி என்ற நூலிலும் இந்த பருப்பு ஊட்டச்சத்து களஞ்சியமாக உள்ளதாம்.

 அதாவது 100 கிராம் துவரம்பருப்பில் 652 மி.கி கால்சியம் உள்ளது. அது மட்டுமில்லாமல் பாலில் 120 மி.கி கால்சியம் மட்டுமே உள்ளது என்று தெரியவந்துள்ளது. ஆகவே பாலை விட 6 மடங்கு கால்சியம் சத்துக்கள் நிறைந்துள்ள பொருள் துவரம் பருப்பு ஆகும். 

கல்புர்கி ஆராய்ச்சி நிலையத்தின் பேசிய மூத்த விஞ்ஞானி டாக்டர் முனிசாமி தெற்கு கர்நாடகாவில் பயிரிடப்படும் பருப்பில் கால்சியம் உள்பட பல்வேறு சக்திகள் காணப்படுகின்றது என்றார்.

அந்த பருப்பில் காணப்படும் தோள்கள் விரைவில் ஜீரணமாகாது ஆகவே அதிலிருந்து தோளை நீக்குவது என்பது மிகவும் கடினமான ஒன்று தான் என்கிறார்.

இதற்கு பல வழிமுறைகள் நடந்து வருகிறது. அவ்வாறு நடைபெற்றுவரும் நிலையில் மற்றோரு ஆராய்ச்சியாளர்  குல்தீப் சிங் கூறிருப்பதாவது துவரம்பருப்பில் பல்வேறு சத்துக்கள் உள்ளது. இதனை முழுமையாக மக்கள் பயன்படுத்துவது குறித்த ஆய்வுகள் நடைபெற்றுவருகிறது. அதுவரை மக்கள் அனைவரும் துவரம் பருப்பை பருப்பு சாதமாகவோ, சாம்பார், பருப்பு குழம்பு போன்றவற்றை சாப்பிட்டுவாருங்கள் என்கிறார்கள்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!