நாம் தினமும் கூந்தலை வாருவதனால் தலையில் மயிரை வளரச் செய்ய முடியுமா?

#ஆரோக்கியம் #தலைமயிர் #அன்டனி #தேவராஜ் #அன்டனி தேவராஜ் #Health #Hair #Antoni #Theva #Antoni Thevaraj
நாம் தினமும் கூந்தலை வாருவதனால் தலையில் மயிரை வளரச் செய்ய முடியுமா?

தினமும் சாப்பிடுதல், குளித்தல் மற்றும் பல்துலக்குதல் போன்ற வேலைகள் எவ்வளவு முக்கியமானதோ அந்த அளவிற்கு கூந்தலை வாருதலும் தினமும் முக்கியம். 

நீங்கள் தினமும் கூந்தலை வாருவதினால் உங்கள் தலையில் உள்ள அழுக்கு மற்றும் இறந்த சரும செல்கள் ஆகியவற்றை வெளியேறி முடியை அடர்த்தியாகவும் மற்றும் பளபளப்பாகவும் இருக்க வைக்கிறது. 

 பெண்கள் ஒரு நாளைக்கு 1 அல்லது 2 முறை கூந்தலை வார வேண்டும் என்று ஆய்வின் படி சொல்லபடுகிறது. ஏனென்றால் சீப்பினால் நம்முடைய கூந்தலை சீவும்போது உச்சந்தலையின் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்து முடியை ஆரோக்கியமாக வளர செய்கிறது.  
கூந்தலை நாம் வாரும்போது நமது உச்சந்தையில் இருக்கும் செபேசியஸ் சுரப்பிகள் சுரக்கப்ட்டு சீவம் என்ற எண்ணெயை உற்பத்தி செய்து முடியை இயற்கையாகவே வளர செய்யும்.

அதிலும் குறிப்பாக பெண்கள் ஒரு நாளைக்கு 2 அல்லது 3 முறை கூந்தலை வாரினால் சேபேசியஸ் சுரப்பிகள் மேலும் தூண்டப்பட்டு அது முடியின் ஆழம் வரை சென்று உங்களுடைய முடியின் வளர்ச்சியை நன்றாக அதிகரிக்க செய்யும். 

அதனால் ஒரு போதும் கூந்தலை வார மறக்காமல் தினமும் கூந்தலை வாருங்கள்.
நாம் நம்முடைய கூந்தலை வாராமல் அப்படியே விட்டு விட்டால் முடி கொட்டுதல், முடியின் அடர்த்தி குறைதல் மற்றும் முடி வளருவதில் பிரச்சனை போன்ற பின் விளைவுகள் ஏற்படும்.

அதனால் கட்டாயமாக ஒரு நாளைக்கு 1 அல்லது அதற்கும் மேற்பட்ட முறை கூந்தலை வரலாம்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!