அதிமுகவின் பொதுச் செயலாளராக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி
சில மாதங்களுக்கு முன்பு பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டு இடைக்கால பொதுச் செயலாளர் ஆனார் எடப்பாடி பழனிச்சாமி பின்பு எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர்களுக்கும் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தரப்பினருக்கும் இடையே சட்டப் போர் நடந்து வந்த நிலையில் சில வாரங்களுக்கு முன்பு பொதுச் செயலாளருக்கான தேர்தல் அதிமுக கட்சியில் நடைபெற்றது அதில் எடப்பாடி பழனிச்சாமி தவிர வேற யாரும் போட்டியிடவில்லை.
தீர்மானங்களுக்கு எதிராகவும் முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தரப்பினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தன இந்த வழக்கின் நீதிபதியாக குமரேஷ்பாபு தலைமையிலான அமர்வு விசாரித்து வந்த நிலையில் முக்கியமான தீர்ப்பு வெளியானது. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என்றும் இதற்கு எதிராக பன்னீர்செல்வம் தரப்பினர்கள் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து அதிமுகவின் பொது செயலாளர் ஆனார் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவுவாளர்களுக்கிடையே பெரும் சந்தோஷத்தை வெளிப்படுத்தினர்.
இதைத்தொடர்ந்து அதிமுக தேர்தல் ஆணையர்கள் நத்தம் விஸ்வநாதன் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் எடப்பாடி பழனிச்சாமி போட்டி இன்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவித்தனர் அதிமுகவின் பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அனைத்து தொண்டர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டார் இவர் அதிமுகவின் ஏழாவது பொதுச் செயலாளர் தேர்வு செய்யப்பட்டார் பொதுச் செயலாளர் முக்கிய அம்சம் கட்சியில் எடுக்கப்படும் அனைத்து முடிவுகளுக்கும் இறுதியில் பொதுச் செயலாளருடைய கையெழுத்து முக்கியமாக இருக்கும்.