இப்படியான முறையிலும் உங்கள் குருதியில் இருக்கும் வெல்லத்தின் அளவைக்கட்டுப்படுத்தலாம்...
முன்னர் போலன்றி தற்போது முதியோருக்கு மட்டுமல்லாமல் அனைவருக்கும் நிரிழிவு நோய் வருகிறது. அதனால் வாழ் நாள் முழுவதும் குளுசைகள் எடுக்க வேண்டுமென்று கவலைப்படுபவர்களுக்கான ஆலோசனையையே இந்தப்பதிவு தருகிறது.
அதன்படி நிரிழிவு உள்ளவர்கள் அது கட்டுப்பாட்டிலிருப்பின் கண்டபடி உணவு உற்கொள்ளலாமென்றில்லை ஆனால் சில மாற்றங்களைக்கொண்டுவருவதானல் அதனை தொடர்ந்து கட்டுப்பாட்டில் வைக்கலாம்.
தண்ணீர் குடிக்க வேண்டும்:
உடலில் உள்ள சர்க்கரையின் அளவை குறைப்பதற்கு தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும். தண்ணீர் குடித்தால் எப்படி சரி ஆகும் என்ற கேள்வி இருக்கும். நீங்கள் தண்ணீர் அதிகமாக குடிப்பதன் மூலம் சிறுநீர் வெளியேற்றுவீர்கள். சிறுநீர் மூலமாக இரத்த சர்க்கரை வெளியேறும்.
நடைப்பயிற்சி செய்ய வேண்டும்:
நீங்கள் தினமும் நடைப்பயிற்சி செய்வது நல்லது. அதாவது 20 நிமிடம் நடைப்பயிற்சி செய்வது இரத்த சர்க்கரையின் அளவை குறைக்கஉதவுகிறது
நார்ச்சத்து உணவுகள்:
நீங்கள் தினமும் சாப்பிடும் உணவுகளில் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்து கொள்ளுங்கள். இப்படி சாப்பிடும் பொழுது சர்க்கரையின் அளவையும் குறைக்கும் மேலும் சர்க்கரை நோய் வராமலும் பாதுகாத்து கொள்ளும்.
கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகள்:
நீங்கள் சாப்பிடும் உணவுகளில் கார்போஹைட்ரேட் குறைவாக உள்ள உணவுகளாக சாப்பிட வேண்டும்.
தியானம் செய்வது:
சுகர் பிரச்சனை உள்ளவர்களும் சரி, சுகர் பிரச்சனை இல்லாதவர்களும் சரி மன அழுத்தம், கவலை போன்ற உணர்வுகள் அதிகமாக ஏற்படும் போது சர்க்கரையின் அளவு அதிகரிக்கும். அதனால் இந்த உணர்வுகள் ஏற்படும் பொழுது தியானம் மேற்கொள்வது நல்லது.
சர்க்கரை நோய் வராமல் தடுப்பது எப்படி.?
- முதலில் நீங்கள் சாப்பிட்டவுடன் தூங்குவதை தவிர்க்க வேண்டும்.
- காலை உணவு சாப்பிடாமல் இருக்க கூடாது. இதனால் சுகர் பிரச்சனை ஏற்படும்.
- அடுத்து நீங்கள் நன்றாக தூங்க வேண்டும்.
- சத்தான உணவுகள் சாப்பிட வேண்டும். அதாவது காய்கறிகள், கீரை வகைகள், தானியங்கள் போன்றவை உங்கள் உணவில் சேர்த்து சாப்பிட வேண்டும்.
நீங்களும் நிரிழிவு எனும் தொற்றா நோய் என்றவுடன் பயப்படாது அதனை மேற்கூறிய முறையில் கட்டுக்குள் வைத்திருப்பின் எந்த அச்சமும் கிடையாது.