நமது என்பானது பலவீனமடையாதிருக்க கடைப்பிடிக்க வேண்டிய பழக்கங்கள்.
அன்றைய காலகட்டங்களில் வாழ்ந்த மனிதர்களின் என்பாது மிகவும் வலிமையானதாகக் காணப்பட்டது. வயதானபோதே அது பலவீனம் அடைந்து சென்றது ஆனால் இப்போது இளம் வயதினருக்கும் என்பு பலவீனமாவதைத் தடுக்க முடியாதுள்ளது.
ஆகவே இந்த பதிவில் அனைவரும் என்பினை பலவீனமடையாது இருக்க செய்ய வேண்டியவைகளைக் காணலாம்.
அதிக நேரம் உட்கார்ந்து கொண்டிருப்பது:
அதிக நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து கொண்டே இருக்க கூடாது. நீங்கள் அதிக நேரம் உட்கார்ந்திருப்பதால் கால்சியம் சத்து குறைகிறது. அதனால் தினமும் நடைப்பயிற்சி மற்றும் ஓடுவது போன்ற பயிற்சிகள் செய்வதனால் எலும்புகள் ஆரோக்கியமாக இருக்கும்.
அசைவம் சாப்பிடுவது:
அசைவம் சாப்பிடுவது நல்லது தான். ஆனால் அதிகம் எடுத்து கொள்ள கூடாது. அசைவம் மற்றும் பால் அதிகம் அதிகமாக சாப்பிடுவதை தவிர்த்திடுங்கள். ஏனென்றால் அசைவம் அதிகமாக சாப்பிடும் போது எலும்புகளின் கால்சியம் சத்தை சிறுநீராக வெளியேற்றுகிறது.
புகை பிடிக்கும் பழக்கம்:
புகை பிடிப்பது மற்றும் புகையிலை சாப்பிடுவது எலும்புகளின் ஆரோக்கியத்தை பாதிக்கும்.
குளிர்பானம் குடிப்பதால் ஏற்படும் தீமைகள்:
குளிர்ச்சி நிறைந்த பொருட்களை சாப்பிடுவது எலும்புகளின் ஆரோக்கியத்தை பாதிக்கும். குளிர்பானங்களில் நிறைந்திருக்கும் சுகர், காபின் மற்றும் பாஸ்போரிக் ஆசிட் எலும்புகளில் நிறைந்திருக்கும் கால்சியத்தை வெளியேற்றுகின்றன.
டீ, காபி குடிப்பதால் ஏற்படும் தீமைகள்:
சில நபர்கள் அளவுக்கு அதிகமாக டீ, காபி குடிக்கும் பழக்கம் இருக்கும். “அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு” என்ற பழமொழி போல் தான் அளவுக்கு மீறி எந்த பொருளையும் உட்கொள்ள கூடாது. டீ, காபி அதிகமாக குடித்தால் எலும்புகளின் ஆரோக்கியத்தை பாதிக்கும் என்று ஆய்வில் கூறியுள்ளனர்.
உப்பு, வெல்லம்அதிகம் சாப்பிட்டால்:
சில நபர்கள் உப்பினையும் வெல்லத்தினையும் அதிகம் விரும்புவா். இந்த உப்பு வெல்லம் ஆகியவிரண்டும் என்பினைப் பலவீனமடையச் செய்யவல்லது.