வயநாடு தொகுதிக்கு இடைத்தேர்தல் அவசரம் காட்டவில்லை - ராஜிவ்குமார்
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி சமீபத்தில் கர்நாடகா பொதுக்கூட்டத்தில் மோடி என்னும் சாதியை விமர்சித்து பேசிய வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை தொடர்ந்து எம்பி பதிவிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
இதைத் தொடர்ந்து வயநாடு தொகுதிக்கு எப்போது தேர்தல் நடத்தப்படும் என்ற கேள்வி எழும்பிய நிலையில், ஒரு எம்பி அல்லது எம் எல் ஏ இறந்தாலும் இல்லை ராஜினாமா செய்தாலும் தொகுதி காலியாக அறிவிக்கப்பட வேண்டும் ஆறு மாதத்திற்குள் இது தேர்தல் ஆணையத்தின் சட்ட விதியில் ஒன்று.
கர்நாடகா சட்டசபை தேர்தல் மற்றும் பல மாநிலங்களின் காலியாக உள்ள சட்டசபை தொகுதிகளுக்கு தலைமை தேர்தல் கமிஷன் அறிவித்தது. அதில் வயநாடு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்படவில்லை, இதற்கு பதில் அளித்த தலைமை தேர்தல் அதிகாரி ராஜ்குமார் பிப்ரவரி மாத நிலவரப்படி காலி என அறிவிக்கப்பட்ட தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. வயநாடு தொகுதி காலி என இம்மாதம் அறிவிக்கப்பட்டது தீர்ப்பு எதிர்த்து மேல் முறையீடு நீதிமன்றத்தில் உள்ளதால் 30 நாட்கள் அவகாசம் உள்ளது இதனால் நாங்கள் அவசரம் காட்டவில்லை என்று அவர் கூறினார்.