திராட்சை ரசம் கோடைக் காலங்களில் அருந்துவதனால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்.
கோடை காலத்தில் உஷ்ணத்தைப் போக்க நாம் திராட்சை ரசம் குடிப்பது வழக்கம். இந்த திராட்சை ரசத்தின் மூலம் நமது உடலுக்கு என்ன கிடைக்கும் என்பதை இன்றைய பதிவில் பார்க்கலாம்.
திராட்சை ரச நன்மைகள்.
இதயம், சிறு நீரகம்
திராட்சை ரசம் குடிப்பதால் இதயம் மற்றும் சிறுநீரகம் சீர்பெறுகிறது.
நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்:
தினமும் இந்த திராட்சை ரசம் குடிப்பதால் அதில் உள்ள வைட்டமின் சி நமது உடலின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவுகின்றது. மேலும் ஆய்வு ஒன்றில், கருப்பு திராட்சையை ரசம் போட்டு தொடர்ந்து குடித்து வருவதால் நோயெதிர்ப்பு மண்டலமே வலிமையடைவதாக கண்டறியப்பட்டுள்ளது.
மாரடைப்பை தடுக்கின்ற திராட்சை ரசம்:
மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் பிரகாரம் திராட்சை ரசத்தில் இதயத்தினை அடைக்கும் தன்மையை இது விலக்குவதாக அறியப்பட்டுள்ளது.
மெட்டபாலிசம் மேம்படும் :
பொதுவாக திராட்சை பழத்தில் ஜூஸ் போட்டு குடித்து வருவதால் அது நமது உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும். அதிலும் சிவப்பு திராட்சையால் தயாரிக்கப்படும் ரசத்தைக் குடிப்பதால், உடலின் மெட்டபாலிசம் பல மடங்கு அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
இரத்த அழுத்தம்:
தினமும் திராட்சை ரசம் குடிப்பதால் இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகின்றது. இதற்கு அதில் உள்ள ப்ளேவோனாய்டுகள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் போன்றவை தான் காரணம். மேலும் திராட்சை ஜூஸ் தினமும் குடிப்பதால் இதய தசைகளை ரிலாக்ஸ் அடையச் செய்து, இரத்த ஓட்டத்தை சீராக்கி, இரத்த அழுத்தத்தில் ஏற்றத்தாழ்வு ஏற்படுவதைத் தடுக்க உதவுகின்றது.
உடல் எடை குறைய:
திராட்சை ரசம் நேரடியாக உடல் எடையைக் குறைக்க உதவாவிட்டாலும், இதனை உடற்பயிற்சி செய்து முடித்த பின் குடிப்பதன் மூலம், மெட்டபாலிசம் அதிகரித்து, கொழுப்புக்கள் மற்றும் கலோரிகள் கரைக்கப்பட்டு, உடல் எடை குறைய உதவுகிறது.
ஒற்றைத் தலைவலி:
தினமும் திராட்சை ஜூஸை சர்க்கரை சேர்க்காமல் குடித்து வருவதால், ஒற்றைத் தலைவலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும் என்று கூறப்படுகின்றது.
இரத்தத்தை சுத்தமாக்கும்:
தினமும் திராட்சை ரசம் குடிப்பதால் இரத்தத்தில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றி, இரத்தம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளைத் தடுக்க உதவுகின்றது, மேலும் உடலில் இருக்கும் இரத்தத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகின்றது.