தமிழரின் வாழ்வியல் முறையில் இருந்து பிரிக்கமுடியாத ஒரு உணவு இட்லி.. இன்று உலக இட்லி தினம்!
உலக இட்லி தினம் 2023
இட்லியை போல சிறந்த டிபன் வேறுகிடையாது. சமைக்கும்போதும் சரி சாப்பிட்ட பிறகும் சரி அதிக தொந்தரவு தராத ஒரே உணவு. இட்லியை சட்னி- சாம்பார்- காம்போவில் சைவமாக சாப்பிட்டாலும் ருசிக்கும். இட்லி - கறிக்குழம்பு என அசைவமாக சாப்பிட்டாலும் சுவைக்கும். சீனியுடன், இட்லி பொடியுடன் என எந்த சைட் டிஷ் இருந்தாலும் சாப்பிட்டுவிடலாம். அதனால் தான் சில உளவியலாளர்கள் கூட இட்லியை போல இருங்கள் என்பார்கள். இந்த வரிசையில் 'எமோஷனல் இண்டலிஜன்ஸ்' என்ற மையக்கருத்தில் சோம.வள்ளியப்பன் 'இட்லியாக இருங்கள்' என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். இட்லியாக இருந்தால் சாதிக்கவும் செய்யலாம். அடடே!!
ரவா இட்லி, பொடி இட்லி, தட்டு இட்லி, சாம்பார் இட்லி, மதுரை இட்லி, குஷ்பூ இட்லி, மல்லிபூ இட்லி என இட்லி எடுக்காத அவதாரங்களே இல்லை. பூவில் தொடங்கி நடிகை வரையிலும் இட்லிக்கு இல்லாத வெரைட்டியே இல்லை. இன்று (மார்ச் 30) உலக இட்லி தினம். இன்று உலகமெங்கும் உள்ள இந்தியர்கள் இட்லியை புகழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.