சிறுநீரக ஆரோக்கிய குறை மற்றும் சிறுநீரக கல் இருப்பின் உடலில் ஏற்படும் அறிகுறிகள்.
#ஆரோக்கியம்
#நோய்
#அன்டனி
#தேவராஜ்
#அன்டனி தேவராஜ்
#Health
#Disease
#Antoni
#Theva
#Antoni Thevaraj
Mugunthan Mugunthan
1 year ago
உடலை சுத்திகரக்கும் கருவியான சிறுநீரகம் குருதியில் இருக்கவல்ல கழிவுகளை வெளியேற்றி நமது உடலை சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகிறது.
இப்படி நமது உடலை பாதுகாப்பாக வைத்திருக்கும் சிறுநீர்ப்பையில் கற்கள் இருந்தால் என்ன அறிகுறிகள் தோன்றும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
சிறுநீரக கல் அறிகுறிகள்:
இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான மக்கள் அவதிப்படும் பிரச்சனைகளில் ஓன்று தான் இந்த சிறுநீரக கல். சரியாக தண்ணீர் குடிக்காமலும், சிறுநீர் வெளியேற்றாமலும் இருப்பதால் சிறுநீர்ப்பையில் கற்கள் உருவாகிறது. உணவு பழக்கங்கள் சரியாக இல்லாவிட்டாலும் சிறுநீரகத்தில் பாதிப்புகள் ஏற்படுகிறது. இதை ஆரம்பத்திலேயே கவனிக்க தவறினால் பெரிய பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
- சிறுநீரக கல் இருந்தால் ஆரம்பத்தில் வலி ஏற்படும். இது முதுகு பகுதியில் வலி உருவாக தொடங்கும்.
- சிறுநீர் கழிக்கும் எரிச்சல் ஏற்படும். சில சமயங்களில் சிறுநீருடன் இரத்தம் கலந்து வெளியேறும்.
- வயிற்றின் இடது பகுதியில் கடுமையான வலி ஏற்படும்.
- சிறுநீர் கழிக்கும் போது துர்நாற்றம் வீசும்.
- சரியாக சிறுநீர் வெளியேற்றாமல் இருப்பதால் உடலில் உள்ள உப்புகள் படிந்து சிறுநீர்ப்பையில் கற்களாக மாறுகின்றன.
- வாந்தி, குமட்டல் மற்றும் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வுகள் ஏற்படும்.
- அதேபோல் வயிற்றின் மேல்பகுதியில் முதுகு புறத்தில் கடுமையான வலி ஏற்படும்.
- பொதுவாக, 90% கற்கள் சிறியதாக இருந்தால் சிறுநீர் வழியே வெளியேறிவிடும்.
- அதுவே, நீங்கள் ஆரம்பத்திலேயே கவனிக்க தவறினால் அந்த கற்கள் சிறுநீர் பாதையில் அடைப்பை ஏற்படுத்தும். அது உங்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்த கூடும்.
- நீங்கள் சரியாக சிறுநீர் கழிக்க தவறினால் கற்களாக மாறும் உப்பு இரத்தத்தில் கலந்து உப்புநீர் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும்.
- பெரியளவில் இருக்கும் கற்களை அதிர்வலைகள் மூலமாக சிறு துண்டுகளாக உடைத்து வெளியேற்றி விட முடியும். அதுவே சிறுநீர்ப்பையில் உள்ள கற்கள் வெளியேறாவிட்டால் அறுவைச் சிகிச்சை முறையில் வெளியேற்ற வேண்டும்.
- இந்த சிறுநீரக கற்களை ஆரம்பத்திலேயே சரிசெய்ய வேண்டும். இதுபோன்ற அறிகுறிகள் உங்களுக்கு இருந்தால் மருத்துவரை அணுகி பரிசோதித்து கொள்வது நல்லது.