கர்நாடகாவில் கிராமத்தில் நடந்த திருவிழா ஒன்றில் காந்தாரா புகழ் பூத கோலா நடனம் ஆடிய நடனகலைஞர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
காந்தாரா புகழ் பூத கோலா.. நடனம் ஆடிக்கொண்டே இறந்த நடனக்கலைஞர்.!!
கர்நாடகாவின் புகழ்பெற்ற பாரம்பரிய கலை பூத கோலா, அம்மாநில கடற்கரையோர பகுதிகளில் அமைந்துள்ள கிராமத்தில் பூத ஆராதனா செய்வார்கள்
சமீபத்தில் கன்னட மொழியில் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்த திரைப்படம் காந்தாரா. ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்து இருக்கும் இந்த திரைப்படத்தை பார்த்து தற்போது பல நடிகர்களும் மிரண்டு போயிருக்கின்றனர்.
விமர்சன ரீதியாக மட்டுமல்லாமல், வசூல் ரீதியிலும் பட்டையை கிளப்பியது என்றே சொல்ல வேண்டும். அதிலும் இறுதி காட்சியில் வரும் அந்த காந்தாரா பூத கோலா நடனம் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தது.
கர்நாடகாவின் புகழ்பெற்ற பாரம்பரிய கலை பூத கோலா, அம்மாநில கடற்கரையோர பகுதிகளில் அமைந்துள்ள கிராமத்தில் பூத ஆராதனா செய்வார்கள் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், தக்ஷினா கன்னடா மாவட்டத்தில், தெய்வீக கலை நிகழ்ச்சியில் பங்கேற்று பூத கோலா நடனம் ஆடிக் கொண்டிருந்த கந்து அஜிலா என்ற நடன கலைஞர் திடீரென கீழே விழுந்தார்.
மயங்கி விழுந்திருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மக்கள் மருத்துவர்களுக்கு தகவல் அளித்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறினர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது