சருமம் ஒளிர, முகப்பரு தழும்புகள் நீங்க ஆரஞ்சு தோல் இப்படி யூஸ் பண்ணுங்க!
#Health
#Healthy
#World_Health_Organization
#Health Department
Mani
2 years ago

ஆரஞ்சு பழத்தோல் அதிகளவு நோய் எதிர்ப்பு சக்தி உள்ளதால், இவற்றை நம் முகத்தில் போடும்போது முகத்தில் ஏற்படும் தொற்றுக்களை சரி செய்ய உதவுகிறது.
ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் C மற்றும் ஆண்டிஆக்ஸைட் அதிகளவு உள்ளதால் இவற்றின் தோலை முக அழகிற்கு பயன்படுத்தும் போது சருமம் பொலிவுடனும், வெண்மையாகவும் காணப்படும்.
பருக்கள் மற்றும் பருக்கள் வந்த தழும்புகளை மறையச் செய்வதில் ஆரஞ்சு தோலுக்கு மிக முக்கிய பங்குஉண்டு.
கண்ணுக்கு கீழே உள்ள கருவளையங்களை போக்குகிறது.
ஆரஞ்சு தோலில் உள்ள வைட்டமின் சி வயதான தோற்றத்தை மறைத்து சருமத்தை இளமையாக வைத்திருக்க உதவி செய்கிறது.
ஆரஞ்சுப் பழத்தோலை வெயிலில் உலர்த்தி, கடலைப்பருப்பு, கஸ்தூரி மஞ்சள், சிறிது பாதாம் பருப்பு சேர்த்து பொடியாக்கி, பன்னீருடன் முகத்தில் பூசிக்கொள்ள மிருதுவாக, பளபளப்பாக முகம் மாறும்.



