சி.பி.ஐ. வைர விழாவை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைர விழா முத்திரை மற்றும் நினைவு நாணயங்களை வெளியிடுகிறார்.

#India #Prime Minister
Mani
1 year ago
சி.பி.ஐ. வைர விழாவை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைர விழா முத்திரை மற்றும் நினைவு நாணயங்களை வெளியிடுகிறார்.

ஏப்ரல் 1, 1963 இல், மத்திய புலனாய்வுப் பணியகம் நிறுவப்பட்டது. அதன் வைர விழா கொண்டாட்டங்கள் டெல்லி விஞ்ஞான் பவனில் இன்று (திங்கட்கிழமை) நடக்கிறது. வைர விழா கொண்டாட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.

சிபிஐக்கு குடியரசுத் தலைவரின் காவல் பதக்கமும், சிறந்த விசாரணை அதிகாரிகளுக்கு தங்கப் பதக்கமும் பிரதமர் மோடி வழங்குகிறார்.

மேகாலயா மாநிலம் ஷில்லாங்கிலும், மகாராஷ்டிரா மாநிலம் புனேயிலும் புதிய சிபிஐ அலுவலகங்களை பிரதமர் மோடி திறந்து வைத்தார். சிபிஐயின் வைர விழாவை முன்னிட்டு முத்திரை மற்றும் நினைவு நாணயம் ஒன்றையும் அவர் வெளியிட்டார். சிபிஐயின் "டுவிட்டர்" கணக்கையும் தொடங்கினார்.