சமூகநீதி நிலைப்பாட்டை நிலை நிறுத்துவோம் மாநாட்டில் மு க ஸ்டாலின் பேச்சு
டெல்லியில் உள்ள கஸ்தூர்பா காந்தி மார்க் கன்னாட் பகுதியில் சமூக நீதிக்கான அகில இந்திய கூட்டமைப்பின் முதல் தேசிய மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் பல்வேறு மாநில முதலமைச்சர்கள் கலந்து கொண்டனர், ஒரு சில முதலமைச்சர் காணொளி மூலமாக கலந்து கொண்டனர், அதில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் காணொளி மூலம் மாநாட்டில் கலந்து கொண்டார்.
சமூகம், அரசியல், பொருளாதாரம், மக்கள் மேம்பாடு அனைத்திலும் நவீனமயம் என்கிற திராவிட மாடல் ஆட்சியை தமிழ்நாடு அரசு நடத்தி வரும் நிலையில், சமூக நீதியை தேசிய அளவில் முன்னெடுத்து செல்லும் வகையில் இந்த மாநாடு நடைபெற்று வருகிறது. மாநாட்டில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கூறுகையில்.
சமூகநீதி நம்மை இணைத்துள்ளது. சமூகநீதியை நிலைநாட்டுவதில் நாங்கள் கவனமாக இருக்கிறோம்.சமூகநீதி எனப்படும் இடஒதுக்கீடு என்பதே சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பின்தங்கியவர்களுக்கு தரப்பட வேண்டும் என்பதே இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் வரையறை. இதில் பாஜக அரசை கண்டித்து பல முன்னறிவிப்புகளை வெளியிட்டார் அதில் பாஜக சமூக நீதி இல்லை மேல்மட்ட வகுப்பினர்களுக்கு அவர்கள் சலுகைகளை அள்ளித் தருகின்றார்கள்.
உயர்சாதியில் இருக்கும் ஏழைகளுக்கு 10 சதவிகித இடஒதுக்கீடு வழங்குவது ஒன்றிய பாஜக அரசின் திட்டம். இடஒதுக்கீடு வழங்குவதால் தகுதி, திறமைபொய்விட்டது என்று கூறி வந்த சிலர் இந்த இடஒதுக்கீட்டை மட்டும் ஆதரிக்கிறார்கள்.
நாடு முழுவதும் உள்ள இளைஞர்களுக்கு சமூக நீதிக்கான புரிதலை ஏற்படுத்த வேண்டும். இடஒதுக்கீட்டை தேசிய, மாநில அளவில் கண்காணிக்க வேண்டும். சமூகநீதியை காக்கும் கடமை நமக்குத்தான் உள்ளது. அதனால்தான் இணைந்துள்ளோம் புறக்கணிக்கப்பட்டோரை கைத்தூக்கி விடுவதுதான் சமூகநீதி என்றார்.