டெல்டா மாவட்டங்களை மத்திய அரசு அழிக்க சூழ்ச்சி? அன்புமணி ஆவேசம்!
அன்புமணி செய்தியாளர்கள் சந்திப்பில் தமிழக ஆளுநர் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டான ரம்மிக்கு விரைந்து தடை ஒப்புதல் அளிக்க வேண்டும், ஆன்லைன் சூதாட்டத்தில் தமிழகத்தில் 19 பேர் இதுவரை மரணித்ததாகவும் குறிப்பிட்டு இருந்தார்
தமிழக அரசு மத்திய அரசு கொண்டுவரும் டெல்டா மாவட்டத்தில் நிலக்கரி எடுக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பைக் கொண்டு வர வேண்டும், அமைச்சர் கூறுகையில் என்எல்சி ஆல் தான் தமிழ்நாடு மின்மிகை மாநிலமாக கூறுவது கண்டிக்கத்தக்கது
காவிரி டெல்டாவை அழிக்க மிகப்பெரிய சூழ்ச்சி நடக்கிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதனை இதுவரை கண்டுகொள்ளவில்லை. மாநில அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது? மாநில அரசிடம் இது தொடர்பாக கேட்டால், எங்களுக்கு தெரியாது என கூறுகின்றனர். மத்திய அரசுடன் மாநில அரசு கைகோர்த்து செயல்படுகிறது. என்.எல்.சி தரும் மின்சாரம் எங்களுக்கு தேவையில்லை. டெல்டா மாவட்டத்திலிருந்து ஒரு பிடி மண் கூட எடுக்க விடமாட்டேன். எங்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்வார்கள். சட்டப்பேரவையில் என்.எல்.சி நிறுவனத்திற்கு, 6 சுரங்கங்களுக்கான அனுமதி கிடையாது என முதலமைச்சர் அறிவிக்க வேண்டும் என்றார்.