டெல்டா மாவட்டங்களை பாலைவனம் ஆக்க மத்திய அரசு முயற்சிக்கிறது வேல்முருகன் குற்றச்சாட்டு
நேற்று தமிழக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் அதிமுக மற்றும் திமுக சார்பில் கொண்டுவரப்பட்டது இந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தில் சில கண்ணியமான பேச்சு இடம் பெற்றது. அதில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் பேசுகையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு தமிழ்நாட்டில் இருக்கின்ற பொழுது தமிழ்நாட்டு அரசின் ஒப்புதல் பெறாமல் குறைந்தபட்சம் தமிழ்நாடு அரசுக்கு முடிவு முறைப்படி தகவல் தெரிவிக்காமல் மத்திய அரசு கடந்த மார்ச் 29ஆம் தேதி நிலக்கரி சுரங்கம் அமைப்பு தொடர்பாக மத்திய அரசு ஏழ் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இந்த ஏல அறிவிப்பில் டெல்டா மாவட்டங்கள் அதில் கடலூர் மாவட்டத்திலுள்ள சேத்தியாத்தோப்பு உள்ளடைய 20 கிராமங்களில் 21000 ஏக்கருக்கு மேலையும் அதேபோன்று அரியலூர் மாவட்டம் மைக்கேல்பட்டி உள்ளடக்கி 3 கிராமங்களில் 3500 ஏக்கர் நிலங்களையும் தஞ்சை மாவட்டத்தில் வடசேரி உள்ளடக்கிய 11 கிராமங்களில் 17,000 ஏக்கர் நிலங்களை ஏலத்திற்கு விடப்பட்டதாக அறிவித்துள்ளது.
இந்த ஏலத்தில் முன்னணி கார்ப்பரேட் நிறுவனங்கள் பங்கேற்கவில்லை இதனால் நாம் தப்பித்திருக்கிறோம். ஒருவேளை அம்பானிக்கு அதானிக்கோ ஏலம் எடுத்து இருந்தால் இந்த டெல்டா பகுதி மக்களின் வாழ்வுரிமை எப்படி பாதித்திருக்கும் என்பதை கற்பனைகள் கூட என்னால் எண்ணிப் பார்க்க முடியவில்லை. மத்திய அரசு தொடர்ச்சியாக தமிழக அரசை அச்சுறுத்தி வருகிறது இது போன்ற நிகழ்வுகளை தமிழ்நாட்டை பாலைவனம் ஆக்க முயற்சிக்கிறது ஒருபோதும் இதை ஏற்றுக் கொள்ள முடியாது என தெரிவித்தார்.