வாழ்க்கை இவ்வளவு தான். அதை எப்படி வாழ வேண்டும். வாசியுங்கள் நிறைய விடயம் உள்ளே...
உலகில் வாழும் ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு வித இலட்சியங்கள் இருக்கும். இதை நோக்கி அவர்கள் சாதிக்க செய்யும் பயணம் 70 வருடங்கள். அதாவது ஒரு மனிதனின் சராசரி ஆயுட்காலம் 70 ஆண்டுக்குள் அவரவர் இலக்கை அடைவதே வெற்றி.
பால்ய வயது முதல் பருவ வயது வரை பெற்றோர் மற்றும் ஆசான் முயற்சியில் அவர்களை வழிகாட்டலிலும் தயவிலும் வளர்ந்து 20 வயதை அடைகிறோம். இந்த வாழ்க்கையில் நாமாக சாதித்தது என்று ஒன்றில்லை ஏதோ ஒரு கனவுதான் இருக்கும்.
பின்னர் 20 வயது தொடங்கி சாதிக்கத் தொடங்குகிறோம் அதில் பல குறும் வெற்றிகளும் தோல்விகளையும் சந்தித்து 40 வயதை அடைகிறோம். அதாவது 20 + 20 = 40 வயது வர மிகுதி இருப்பது 30 வருடங்கள். இந்த 30 வருடத்தில் நாம் நமது இலட்சியத்தை அடைந்து விட்டால் நமது பாக்கியமே ஆனால் பொதுவாக நடப்பதில்லை. நிம்மதி கிடைப்பது நமது எண்ணம் போல் வாழ்வது முடியாத காரியமாகவே இருக்கும்.
30 வருடங்களில் 10 வருடங்கள் குறைந்த பட்சம் 8 மணி நேர துாக்கத்தில் தொலைத்து விடுகிறோம். மிகுதி 20 வருடங்கள். அதில் வேலை, business என்று பணம் சம்பாதிப்பதற்காக 12 மணிநேரம் உழைக்கிறோம், அதில் 10 வருடங்கள் போய் விடுகிறது.
எஞ்சியிருக்கும் 10 வருடங்கள். அந்த 10 வருடங்களில் மனைவியோடு பிரச்சனைகள்,
குழந்தைகளோடு பிரச்சினைகள்,உடல் நல குறைபாடுகள், என 2 வருடங்கள் போய் விடும்.
மீதி இருப்பது வெறும்: 8 வருடங்கள். அதாவது 2922 நாட்கள். நமது மன திருப்திக்காக,
இந்த 2922 நாட்களை வேண்டுமானால் 'round'டாக 3000 நாட்கள் என வைத்துக் கொள்ளலாம்.
நாம் இந்த உலகத்தில் எந்தவித பிரச்னைகளும் இல்லாமல் ஒரளவு நிம்மதியாக வாழக்கூடிய நாட்கள்,வெறும் 3000 நாட்கள் மட்டும் தான். நாம் அடைந்த வெற்றியுடன் நிம்மதியாக ஏகபோக வாழ்க்கை வாழ்வோம். இந்த3000நாட்கள் வாழ்வதற்கு:மனம் நிறைய…………!!!!!???
- வெறுப்பு,
- கோபம்,
- துரோகம்,
- வன்மம்,
- வன்முறை,
- வஞ்சகம்,
- அகங்காரம்,
- தலைக்கனம்,
- ஏளனம்,
- சந்தேகம்,
என எத்தனையோ எதிர்மறை குணங்களோடு மட்டும் ஏன் நாம் வாழ வேண்டும்? ஆகவே நாம் இதனை இத்தனை நாட்கள் இவற்றுடன் வாழ்வதில் எதைக்காணவிருக்கிறோம்.
வாழ்க்கையில் இவற்றை பின்பற்றலாமே அந்த 70 வருடங்களில்....
- அன்பு,
- கருணை,
- இரக்கம்,
- பாசம்,
- அமைதி,
- நட்பு,
- நம்பிக்கை,
- காதல்,
- இயற்கை,
- உதவி,
- புன்னகை,
- கனிவு,
- குழந்தை,
- பாராட்டு,
- விட்டுக்கொடுத்தல்,
- இறை பக்தி,
- குடும்பம்,
- தன்னம்பிக்கை,
- மகிழ்ச்சி,
- சந்தோஷம்,
நெருப்பு தன்னைச்சுற்றி இருக்கின்ற எல்லாவற்றையும் எரித்துவிடும். தண்ணீர் தன்னைச்சுற்றி இருக்கின்ற எல்லாவற்றையும் குளிர வைக்கும். அது நெருப்பாகவே இருந்தாலும் கூட. ஒருபோதும் நம் வாழ்வில் நெருப்பை உமிழாமல், எப்போதுமே நம் மனதை தண்ணீர்போல் வைத்து இருப்போம்.
எல்லாம் சிவமயம்.