ஐரோப்பா அமெரிக்கா போன்ற நாடுகளில் பரவும் மினிமலிசம் வாழ்வியல்

#European union #America #India #people #Lanka4
Kanimoli
11 months ago
 ஐரோப்பா அமெரிக்கா போன்ற நாடுகளில் பரவும் மினிமலிசம் வாழ்வியல்

மினிமலிசம் என்றால் ஒருவன் தனக்கு தேவையான பொருட்களை மட்டும் தேவையான அளவில் கொண்டு வாழுதல்.

உதாரணமாக ஏழு செட் ஆடைகள் இருந்தால் ஒரு வாரத்தை கழிக்கலாம். வார இறுதியில் அதனை துவைத்து மீண்டும் பயன்படுத்தலாம். இந்த அடிப்படை ஆடைகள் இல்லாமல் பெரும் நிகழ்ச்சிக்குச் செல்ல ஒரு உயர்ந்த ரக ஆடையும் இரவை கழிக்க இரண்டு மிக சாதாரணமான ஆடையும் வைத்திருந்தால் போதுமானது.

இது ஒரு உதாரணம் இதைப்போன்ற ஒரு பெல்ட் ஒரு செருப்பு ஒரு சூ என்று இவர்கள் பட்டியல்கள் பரிந்துரைகள் செய்கிறார்கள்.

எது தேவையில்லாதது என்று எப்படி கண்டுபிடிப்பது என்பதை அறிய ஒரு வழிமுறை பரிந்துரை செய்யப்படுகிறது.

அதாவது உங்கள் வீட்டில் இருக்கும் அனைத்து பொருட்களையும் ஒரு அறையில் அடைத்து விடுங்கள். பிறகு உங்கள் இயல்பான வாழ்க்கையை வாழத் தொடங்குங்கள்.

உதாரணமாக காலையில் முழித்து பல் விளக்க தேவையான பற்பசை குச்சி போன்றவற்றை அந்த அறையில் இருந்து எடுத்து பயன்படுத்துங்கள். அதைப்போன்று உங்களுக்கு தேவையானதை ஒன்றன் பின் ஒன்றாக எடுத்து பயன்படுத்த தொடங்குங்கள்.

உதாரணமாக தேவைக்கு ஏற்ற பொருளை மட்டும் அறைக்குள்ளிருந்து வெளியே எடுத்து வைத்தல். சமைக்க தொடங்கும்போது அந்த சமையலுக்கு தேவையான பாத்திரங்களை எடுத்தல் இரவு உறங்க போகும் போது அதற்கு தேவையான தலகாணி எடுத்தல் இப்படி ஒரு மாதம் நீங்கள் வாழுங்கள் அதற்குத் தேவையான அனைத்து பொருட்களையும் அந்த அறையில் இருந்து வெளியே எடுத்து வையுங்கள்.

ஒரு மாதம் முடிந்த பிறகு நீங்கள் வெளியில் எடுத்து வைத்த பொருட்கள் மட்டும் உங்கள் வாழ்வியலுக்கு போதுமானது. ஒரு மாதம் எடுத்தும் அந்த அறையில் எஞ்சியிருக்கும் பொருட்கள் 90% ஆனது உங்களுக்கு தேவை இல்லாத அதாவது அத்தியாவசியம் இல்லாத பொருட்களே.

இப்படியாக நாம் இதுவரை சேர்த்த பொருட்களை தேவையில்லாததை விட்டு விலகலாம் என்று பரிந்துரை செய்கிறது இந்த மினிமலிசம் எனும் வாழ்வியல் கொள்கை.

உலகம் அதன் வேகத்திற்கு அதிகமாக சுழன்று தனது முதல் புள்ளியின் அவசியத்தை வாழ்வியலாக பேசிக்கொண்டு வருகிறது.

நிர்வாணம் என்பது காமத்தின் நிலையாகவும் ஆன்மீகத்தின் நிலையாகவும் பார்க்கப்படுகிறது ஆனால் எந்த ஒரு பொருள் பற்றும் அல்லாத ஏன் ஆடை என்னும் அடிப்படை பற்று கூட இல்லாத ஓர் ஆதி நிலையே நிர்வாணம். இது எனது பார்வையில் நம் முன்னோர்கள் வாழ்ந்த எளிமையம் நிலையின் உச்சம் நிர்வாணம்.

ஆனால் இவை அனைத்தையும் தனது அன்றாட வாழ்வாக வாழும் உன்னதமான மனிதர்களை நாம் ஏழை என்று அழைக்கிறோம். அடிப்படைத் தேவைகளையும் அளவான பொருட்களையும் உடையவரும் ஏழைகள் அல்ல அவர்களே இந்த உலகில் வாழ தகுதி படைத்த மானுடர்கள்.

Buy 2 Get 1 Free.. Discount Sale, Outlet, Offer என்று வியாபார உலகில் மயங்கி வீடு முழுவதும் பொருட்களை குவித்துக்கொண்டு இருப்பது என்பது இந்த இயற்கையை நாம் அழித்துக் கொண்டு இருக்கிறோம் என்று பொருள்.

மேலும் மரண அறிவித்தல்களுக்கு