71,000 பேருக்கு மத்திய அரசில் வேலை வழங்கப்படுகிறது. பணி நியமன ஆணைகளை பிரதமர் மோடி இன்று வெளியிடுகிறார்.

#government #Prime Minister #Job Vacancy #India
Mani
1 year ago
71,000 பேருக்கு மத்திய அரசில் வேலை வழங்கப்படுகிறது. பணி நியமன ஆணைகளை பிரதமர் மோடி இன்று வெளியிடுகிறார்.

நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக மத்திய அரசின் பல்வேறு துறைகளில் 10 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி செயல்படுத்தி வருகிறார். இந்த திட்டத்தை கடந்த ஆண்டு அக்டோபர் 22ம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அப்போது மத்திய அரசின் பல்வேறு துறைகளில் 7,500 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

'ரோஜ்கார்' என்ற இந்த திட்டம் இளைய தலைமுறையினரிடையே பிரபலமடைந்து வருகிறது. இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் 70,000க்கும் மேற்பட்டோர் மத்திய அரசில் வேலைவாய்ப்பு பெறுகின்றனர்.

இந்நிலையில் பிரதமர் மோடி இன்று (13ம் தேதி) இன்று  காணொலி காட்சி மூலம் நிகழ்ச்சியில் பங்கேற்று மேலும் 71 ஆயிரம் பேருக்கு மத்திய அரசில் பணியாற்ற பணி நியமன ஆணைகளை வழங்குகிறார். அதன்பின், புதிதாக நியமிக்கப்பட்டவர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசுகிறார்.

ரயில்வே மேலாளர், ரயில் நிலைய அதிகாரி, மூத்த வணிக மற்றும் டிக்கெட் எழுத்தர், ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள், காவலர்கள், ஸ்டெனோகிராபர்கள், இளநிலை உதவியாளர்கள், அஞ்சல் உதவியாளர்கள், வருமான வரி ஆய்வாளர்கள், வரி உதவியாளர்கள், மேற்பார்வையாளர்கள், உதவிப் பேராசிரியர்கள், ஆசிரியர்கள் என ரயில்வேயில் பல்வேறு பதவிகள் , நூலகர்கள், செவிலியர்கள், நன்னடத்தை அலுவலர்கள், அனைவரும் குறிப்பிட்ட பணிகளில் நியமிக்கப்படுகின்றனர்.

புதிதாக நியமிக்கப்படும் பணியாளர்கள் 'கர்மயோகி பிராம்ப்' என்ற ஆன்லைன் பயிற்சி மூலம் பயிற்சி பெற வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தப் பயிற்சியில் அரசு ஊழியர்களுக்கான நடத்தை விதிமுறைகள் மற்றும் மனித வளக் கொள்கைகள் உட்பட பல அம்சங்கள் உள்ளன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!