தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் வெப்பநிலை அதிகரிக்கும்: மக்கள் யாரும் வெளியே செல்லவேண்டாம்.!

#Summer #2023
Mani
1 year ago
தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் வெப்பநிலை அதிகரிக்கும்: மக்கள் யாரும் வெளியே செல்லவேண்டாம்.!

தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்றும் மற்றும் நாளையும் வெப்பநிலை அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏப்ரல் 14 முதல் ஏப்ரல் 17 ஆம் நாள் வரை தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். மேலும் ஏப்ரல் 18 ஆம் நாள் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளனர்.

அதிகபட்ச வெப்பநிலை பொருத்தவரை, ஏப்ரல் 14 மற்றும் ஏப்ரல் 15 ஆம் ஆகிய இரண்டு நாட்களுக்குத் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 - 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொருத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.