நாடு முழுவதும் கோடை வெயில் சுட்டெரிக்கிறது. பல மாநிலங்களில் அனல் காற்று வீசி வருகிறது.

#India #State
Mani
1 year ago
நாடு முழுவதும் கோடை வெயில் சுட்டெரிக்கிறது. பல மாநிலங்களில் அனல் காற்று வீசி வருகிறது.

தலைநகர் டெல்லியை பொறுத்த வரையில் நேற்று இரண்டாவது நாளாக அனல் காற்று வீசியது. இயல்பை விட ஐந்து டிகிரி அதிகரித்தது.

நாடு முழுவதும் கோடை வெயில் சுட்டெரிக்கிறது. பல மாநிலங்களில் அனல் காற்று வீசி வருகிறது. பல நகரங்களில் பகல்நேர வெப்பநிலை 40 டிகிரியை தொட்டுள்ளது. டெல்லியை பொறுத்த வரையில் நேற்று 2வது நாளாக அனல் காற்று வீசியது. இயல்பை விட 5 டிகிரி அதிகரித்தது.

இதேபோல், பஞ்சாப், ஹரியானா மாநிலங்களிலும் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸுக்கு மேல் சென்றது. ராஜஸ்தான் மாநிலம் சுருவில் 42.2 டிகிரி செல்சியஸ் வெப்பம் நிலவியதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். கிழக்கு இந்தியா மற்றும் வடகிழக்கு பகுதிகளில் அடுத்த 4 நாட்களுக்கு அனல் காற்று வீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடுமையான வெப்பமும், காற்றும் வீசுவதால், மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இதனால், வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் முடங்கி கிடக்கின்றனர். பகலில் அதிகரித்து வரும் வெப்பநிலை காரணமாக திரிபுரா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.