கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியலில் 2,613 பேர் போட்டியிட்டனர்.

#Election #Bangalore #India
Mani
1 year ago
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியலில் 2,613 பேர் போட்டியிட்டனர்.

224 உறுப்பினர்களை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு வரும் 10ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. வேட்புமனு தாக்கல் கடந்த 13ம் தேதி முதல் 20ம் தேதி வரை நடந்தது.இதில் 3,632 பேர் 5,102 மனுக்களை தாக்கல் செய்தனர்.

கடந்த 21ம் தேதி மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு, அதில் 678 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு, 3,044 மனுக்கள் ஏற்கப்பட்டன. மனுவை வாபஸ் பெறுவதற்கான காலக்கெடு நேற்றுடன் நிறைவடைந்தது.

சட்டசபை தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது, அதில் மொத்தம் 2,613 வேட்பாளர்கள் உள்ளனர். அவர்களில், 2,427 ஆண் வேட்பாளர்களும், 184 பெண் வேட்பாளர்களும், 2 வேட்பாளர்களும் 3ம் பாலினமாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். பாஜக சார்பில் 224, காங்கிரஸிலிருந்து 223, ஜனதா தளம் (எஸ்) 207, ஆம் ஆத்மி 209, பகுஜன் சமாஜ் கட்சியிலிருந்து 133, சுயேச்சைகள் 918 என பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். பெங்களூருவில் உள்ள 28 தொகுதிகளில் 704 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.