+2 தேர்வு முடிவுகள் மே.8ம் தேதி வெளியாகும் - பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு.

#Student #Tamil Student #students #School Student #student union
Mani
1 year ago
+2 தேர்வு முடிவுகள் மே.8ம் தேதி வெளியாகும் - பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு, கடந்த மார்ச் 13-ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 3-ம் தேதி முடிவடைந்தது. இத்தேர்வை, 8 லட்சத்து 75 ஆயிரம் மாணவ, மாணவிகள் எழுதினர். விடைத்தாள்கள் திருத்தும் பணி ஏப்ரல் 10-ம் தேதி தொடங்கியது. தமிழகம் முழுவதும் 79 மையங்களில் விடைத்தாள்கள் திருத்தப்பட்டன. இப்பணியில் ஏறத்தாழ 60 ஆயிரம் ஆசிரியர்கள் மற்றும் இதர பணியாளர்கள் ஈடுபட்டனர்.

இந்நிலையில், மே 7 ம் தேதி நீட் நுழைவுத் தேர்வு நடைபெறுவதால், மே 5 ஆம் தேதி முடிவு வெளியிடப்பட்டால் மாணவர்களின் கவனம் சிதற அதிக வாய்ப்புகள் இருக்கும் என்பதால், பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கான முடிவுகள் வெளியிடும் தேதி மாற்றியமைக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஏற்கனவே, தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், பிளஸ் 2 மாணவர்களும் அவர்களுடைய பெற்றோர்களும் பொதுத்தேர்வு முடிவு எப்போது வெளியாகும் என்று ஆவலாக காத்திருந்த நிலையில், தற்பொழுது இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, மே 8 ம் தேதி பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கான முடிவு வெளியாகும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல் வெளியிட்டுள்ளார். வரும் மே 8ம் தேதி அன்று காலை, சரியாக 9.30 மணிக்கு தெரிந்துகொள்ளலாம். மாணவ, மாணவியர் மற்றும் அவர்களது பெற்றோர், tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in/ -ல் பொதுத்தேர்வு முடிவுகளை .உடனடியாக தெரிந்து கொள்ளலாம்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!