திருப்பூர் அரசு மருத்துவமனையில் இருந்து பிறந்து 3 நாட்களேயான ஆண் குழந்தையை கடத்திச் சென்ற பெண் கைது

#India
Mani
1 year ago
திருப்பூர் அரசு மருத்துவமனையில் இருந்து பிறந்து 3 நாட்களேயான ஆண் குழந்தையை கடத்திச் சென்ற பெண் கைது

திருப்பூர் அரசு மருத்துவமனையில் இருந்து கடத்தப்பட்ட பச்சிளம் குழந்தையை 12 மணி நேரத்தில் போலீசார் மீட்டனர்.

ஒடிசாவைச் சேர்ந்த அர்ஜூன் - கமலினி தம்பதி, திருப்பூரில் தங்கி பனியன் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர். கர்ப்பிணியாக இருந்த கமலினிக்கு கடந்த 22ம் தேதி திருப்பூர் அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது.

கமலினி இருந்த அதே வார்டில், சிகிச்சை பெற்று வந்த வேறொரு பெண்ணுக்கு உதவிக்காக இருந்த உமா என்ற பெண், கமலினிக்கும் உதவி செய்வது போல நடித்து வந்துள்ளார்.

இந்நிலையில், இன்குபேட்டரில் வைத்து சிகிச்சை அளிக்க செவிலியர்கள் குழந்தையை கேட்டதாக கூறி வாங்கிச் சென்ற உமா, குழந்தையை பையில் வைத்து கடத்திச் சென்றுவிட்டார்.

உமாவின் செல்போன் எண்ணின் சிக்னலை வைத்து, அவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயாபாளையத்தில் ஒருவரது வீட்டில் பதுங்கியிருப்பதை கண்டுபிடித்த போலீசார், அவரை கைது செய்து குழந்தையை மீட்டனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!