நீட் தேர்வால் உயிரிழந்த மேலும் ஒரு மாணவர் - ராஜஸ்தானில் சம்பவம்
நாடு முழுவதும் கடந்த ஞாயிற்றுக்கிழமை மருத்துவ நுழைவுத் தேர்வான 'நீட்' தேர்வு நடந்தது. லட்சக்கணக்கான மாணவர்கள் இந்த தேர்வை எதிர்கொண்டனர்.
பயிற்சி மையங்களின் நகரம் என போற்றப்படும் ராஜஸ்தானின் கோடாவிலும் அனேக மாணவர்கள் தேர்வை எழுதினர். அங்கு தங்கி படித்த பெங்களூரு மாணவர் ஒருவர், நீட் தேர்வை சரிவர எழுதாத விரக்தியில் தேர்வெழுதிய மறுநாளே தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
முகமது நசீர் (வயது22) என்ற அந்த மாணவர் அங்குள்ள விக்யான் நகர் பகுதியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி படித்து வந்தார். ஜெய்ப்பூர் சென்று தேர்வெழுதிய அவர் நேற்று முன்தினம் வீடு திரும்பி உள்ளார்.
தேர்வை சரிவர எழுதாத விரக்தியில், மன அழுத்தத்தில் இருந்த அவர், அன்று இரவில் அடுக்குமாடி குடியிருப்பின் 10-வது மாடியில் இருந்து குதித்து உள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.