'மோக்கா' புயல் அதிவேகமாக நகர்ந்து வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்!
நேற்று காலை இந்திய வானிலை ஆய்வு மையம் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் இருந்த ஆழமான காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிர புயலாக மாறி தற்போது வடக்கு-வடகிழக்கு திசையை நோக்கி நகர்ந்து வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இந்தப் புயலுக்கு ‘மோகா’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்த புயல் மத்திய வங்கக்கடலை கடக்கும்போது தீவிரமடைந்து மிகவும் பலமாக மாறியது. கடந்த 13ம் தேதி சற்று வலுவிழந்து கடந்த 14ம் தேதி மணிக்கு 120 முதல் 145 கிமீ வேகத்தில் காற்று வீசியது. இது வங்கதேசம் மற்றும் மியான்மர் இடையே அதிவேகமாக கரையை கடக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் இன்று காலை கடும் புயலாக மாறியது.
மோக்கா புயல் தற்போது அதிவேகமாக நகர்ந்து வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. முன்னதாக மணிக்கு 9 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்துகொண்டிருந்த புயலின் வேகம், கடந்த 6 மணி நேரத்தில் 13 கிலோமீட்டராக அதிகரித்துள்ளது.