2 கோடி மதிப்பிலான தங்கத்தை கடத்த முயன்ற 8 பேர் சென்னை விமான நிலையத்தில் கைது

#India #Flight #Gold #Chennai
Mani
1 year ago
2 கோடி மதிப்பிலான தங்கத்தை கடத்த முயன்ற 8 பேர் சென்னை விமான நிலையத்தில் கைது

வெளிநாடுகளில் இருந்து அதிகளவில் தங்கம் கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் விளைவாக, அவர்கள் விமான நிலையத்தை இன்னும் உன்னிப்பாகக் கண்காணிக்கத் தொடங்கினர். அப்போது, ​​துபாயில் இருந்து சென்னை வந்த விமானத்தில் வந்த மூன்று பயணிகளை நிறுத்தி விசாரித்தனர். மூன்று நபர்களும் முன்னுக்குப்பின் முரணாக அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்ததால், தனி அறைக்கு அழைத்துச் சென்று சோதனை நடத்தினர். அவர்கள் உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ரூ.1கோடியே 21 லட்சம் மதிப்புள்ள 2 கிலோ 315 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

அதேபோன்று, கொழும்பில் இருந்து சென்னைக்கு வந்த இலங்கைப் பெண்கள் இருவர் என மொத்தம் 4 பேர் உள்ளாடைகளில் சட்டவிரோதமாக தங்கத்தை எடுத்துச் சென்று மறைத்து வைக்கப்பட்டிருந்த சட்டைக்குள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நான்கு நபர்களிடமிருந்தும் மொத்தம் ரூ.77,76,000 மதிப்புள்ள 1கிலோ 413 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

கத்தார் தலைநகர் தோகாவில் இருந்து சென்னைக்கு வந்த வாலிபரின் உள்ளாடையில் மறைத்து வைத்து இருந்த 28 லட்சத்து 13 ஆயிரம் மதிப்புள்ள 524 கிராம் எடையுள்ள தங்க கட்டிகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

 சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி 8 பேரிடம் இருந்து ரூ.2,26,89,000 மதிப்புள்ள 4 கிலோ 252 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். இதனையடுத்து இலங்கையைச் சேர்ந்த 2 பெண்கள் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டு தற்போது விசாரணைக்கு நடத்தி வருகின்றனர்.