பலாப்பழம் பார்வையை மேம்படுத்தவல்லது. அதன் ஏனைய ஆரோக்கியப் பலன்கள்.....

#Health #Benefits #Body #Lanka4 #ஆரோக்கியம் #உடல் #பயன்பாடு #லங்கா4
Kantharuban
4 months ago
பலாப்பழம் பார்வையை மேம்படுத்தவல்லது. அதன் ஏனைய ஆரோக்கியப் பலன்கள்.....

முக்கனிகளில் பாலப்பழமும் ஒன்றாக சேர்க்கப்பட்டுள்ளது. இதன் பூர்வீகம் எது என்பது அறியப்படவில்லையாயினும் இந்தியாவில் தோன்றியிருக்கலாம் என நம்பப்படுகிறது. 

இலங்கையின் தேன் பலா மிகச்சிறந்தது. இலங்கையில் தமிழர்கள் அதிகம் வாழும் வடக்கு மற்றும் கிழக்குப் பிரதேசங்களில் பலாப்பழம் விரும்பி உண்ணப்படுகிறது.

யாழ்ப்பாணத்தில் பலாச்சுளையுடன் புட்டு சேர்த்துச் சாப்பிடும் பழக்கம் உள்ளது. இந்தப்பழத்தின் ஆரோக்கியப் பயன்களை நாம் இன்று பார்க்கலாம்.

 மலச்சிக்கல் நீங்க  பலாப்பழத்தை சாப்பிட்டு வந்தால் நீங்கும். மேலும் இதில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால், செரிமான மண்டலம் சீராக செயல்பட்டு, நச்சுக்கள் அனைத்தும் வெளியேறி, முகம் பொலிவோடு இருக்கும்.

 நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பலாப்பழத்தில் வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் இருப்பதால், இவற்றை உட்கொள்வதன் மூலம் உடலின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

புற்றுநோயைத் தடுக்கும் பலாப்பழத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட், பைட்டோ நியூட்ரியன்டுகள் மற்றும் ப்ளேவோனாய்டுகள் உள்ளது. இவை புற்றுநோயின் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பு அளிக்கும் 

பலாப்பழத்தில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால், இது உடலில் சோடியத்தின் அளவை சீராக பராமரிக்கும். இதனால் உடலில் உயர் இரத்த அழுத்தம், பக்கவாதம் மற்றும் மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு குறையும்.

 பார்வையை மேம்படுத்தும் பலாப்பழத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் இருப்பதால், அவை பார்வை கோளாறு ஏற்படுவதைத் தடுப்பதோடு, கண்களில் புரை ஏற்படுவதையும் தடுக்கும். 

தைராய்டு சுரப்பியின் ஆரோக்கியத்திற்கு காப்பர் மிகவும் முக்கியமான ஒன்று. உடலில் காப்பர் குறைபாடு ஏற்பட்டால், அது தைராய்டு சுரப்பியில் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தும். இத்தகைய காப்பர் பலாப்பழத்தில் இருப்பதால், தைராய்டு இருப்பவர்கள், இதனை உட்கொள்வது நல்லது

மேலும் மரண அறிவித்தல்களுக்கு