பாகை ஜோதிடம் என்றால் என்ன?

#ஜோதிடம்
பாகை ஜோதிடம் என்றால் என்ன?

ஒரு ராசி மண்டலம் என்பது 360 பாகையாக கொண்டு பன்னிரெண்டு ராசிகளையும் உள்ளடக்கிய அமைப்பாகும். இந்த 360 பாகையில் ஒரு ராசியானது, 30 பாகையை கொண்டதாகும். 

இந்த ஒரு ராசியில் 0 பாகை முதல் 30 பாகை வரையில் கிரகங்கள் பயணிக்கும். ஒரு கிரகம் நிற்கும் அல்லது பயணிக்கும் பாகையின் அளவை வைத்து பலன் சொல்லப்படும்  ஜோதிட முறையே பாகை முறை ஜோதிடமாகும்.

 பலரும் கிரகங்களின் பாகை முறையை அறிந்திருந்தாலும், பலன் சொல்ல ஆய்வுகளை செய்து கட்டுரையாகவும் நூல்களாகவும் ஆய்வு செய்து கொண்டுதான் இருக்கின்றனர்.

 வேத ஜோதிடத்தில், இது ஒரு புதிய அணுகுமுறை. இதன் முலம் சொல்லப்படும் விவரங்களை சுருக்கமாக காண்போம்.

 கிரகத்தின் இயக்கம் பாகை முறையில்:

 ஒரு ராசியில் ஒரு கிரகமானது 0 பாகை முதல் 30 பாகைக்குள்தான் பயணிக்கும். இதில் 0 பாகை முதல் 10 பாகை வரை குறைந்த பாகை (Low Degree – LD) உடைய கிரகம் என்றும் 20 முதல் 30 வரை அதிக பாகை (High Degree – HD) பெற்ற கிரகங்கள் என்றும் பிரித்து பலன் சொல்லலாம். 

குறைந்த பாகை பெற்ற கிரகங்கள் அது இருக்கும் பாவப் பலன்களை உடனடியாக செய்யாமல் மிகவும் தாமதப்படுத்தும் இயல்பை கிரகங்கள் பெறுகின்றன. ஆதலால், கிரகங்கள் இயங்கா நிலை போன்று தோற்றமளிப்பதாக இருக்கும். ஜாதகருக்கு அந்த கிரகம் வேலை செய்யவில்லை என்ற எண்ணம் ஏற்படும்.

 ஆனால், அந்த கிரகம் தொடர்பான உறவுகளுக்கும் பலன்களுக்காகவும் ஜாதகர் ஏங்கிக் கொண்டும் எதிர்பார்த்துக் கொண்டும் இருப்பார்.

 அதிக பாகை பெற்ற கிரகங்கள் அது இருக்கும் பாவத்தின் பலன்களை விரைவாகச் செய்யும் தன்மையுடன் இயங்குகின்றன. ஆதலால் அந்த கிரகத்தின் பலன்களிலும் ஜாதகருக்கு உடன் பலனளிக்கும்.

 ஜாதகர் விருப்பம் இல்லாமலும் எதிர்பாராமல் பலன்களை கொடுத்துக் கொண்டே இருக்கும். ஆனால், அந்த பாவத்தின் உறவுகளிலும் அந்த கிரகத்தின் பலன்களிலும் அந்த கிரகம் தொடர்பான உறவுகளிடமும் ஜாதகர் அசட்டை தன்மையுடன் செயல்படுவார்.

 அதாவது, அதிக பாகை உள்ள கிரகங்கள் ஜாதகருக்கு சேவை செய்கின்றன. குறைந்த பாகை உள்ள கிரகங்களுக்கு ஜாதகர் தேடி அலைந்து சேவை செய்கிறார் என்பதாகும். இதுவே குறைந்த பாகையுடைய கிரகங்களும் அதிக பாகையுடைய கிரகங்களின் இயல்புகள் மற்றும் செயல்பாடுகளாக உள்ளன.

 ராகு – கேதுக்களின் பாகைகளை எவ்வாறு கண்டறிவது?

 பொதுவாக சாயா கிரகங்களான ராகுவும் கேதுவும் 180 பாகையில் சம சப்தமாக பயணிக்கும். அவ்வாறு இருக்கும் போது அதன் பாகையை கணக்கிடுவதில் சற்று குழப்பம் உண்டாகலாம்.

 அதற்கு சாயா கிரகங்கள் எந்த ராசியில் பயணிக்கிறதோ அந்த ராசியின் அதிபதி எந்த பாகையில் பயணிக்கும் அளவை இந்த சாயா கிரகங்களுக்கு பொருத்திக் கொள்ளலாம்.

 சுருக்கமாக சொல்வோமானால் சாயா கிரகங்கள் சூட்சுமமாக பாகையின் அளவில் தாங்கள் பயணிக்கும் ராசியின் அதிபதியுடன் தொடர்பில் இருக்கின்றன என்பதே அதன் பொருளாகும்.

 பாகை முறையில் கிரகங்களின் யுத்தங்கள் ஒரே ராசியில் இரு எதிரெதிர் கிரகங்கள் ஒரே பாகையில் பயணித்தால் ஜாதகருக்கு எந்த கிரகத்தின் பலன்கள் கிடைக்கப் பெறும் என்ற குழப்பம் உண்டாகலாம்.

 * இவ்விரண்டு கிரகங்களும் நட்பு கிரகங்களா? பகை கிரகங்களா? என முதலில் அறிந்து கொள்ள வேண்டும்.

 * நட்பு கிரகங்களாக இருந்தால், அந்த இரண்டு கிரகங்களும் இணைந்து அந்த பாவத்திற்குரிய பலன்களை கொடுத்துவிட்டுச் செல்லும்.

 * பகை கிரகங்களாக இருந்தால், அந்த இரண்டு கிரகங்களில் எந்த கிரகம் பலம் வாய்ந்தது என்று கணிக்க வேண்டும்.

 * சொந்த வீடாக இருந்தால், சொந்த வீட்டின் கிரகமே முதலில் பலனை அளிக்கும்.

 * சொந்த வீட்டை எந்த கிரகம் பார்க்கின்றதோ அந்த கிரகமும் பலன் அளிக்க முன்வரும்.

 * எந்த கிரகங்கள் கேந்திரத்திலோ, திரிகோணத்திலோ அதே பாகையில் இருக்கிறதோ அந்த கிரகமும் முன்வந்து பலனளிக்கும்.

 * இரண்டும் ஒரே பாகையில் இருந்து யுத்தத்தில் இருந்தால் எந்த தொடர்பு இருந்தாலும் கிரகங்கள் இயங்கா தன்மையில் இருக்கும். உபாசனை கிரகங்கள் ஐந்தாம் பாவத்தில் உள்ள கிரகங்களை உபாசனை செய்யலாம். 

அந்த பாகை முறையில் உயர்ந்த பாகையில் இருந்தால் உடன் பலன் தரும். குறைந்த பாகையில் இருந்தால் ஜாதகர் அந்த கிரகத்திற்காக உபாசனை தவம் செய்ய வேண்டி வரும்.

 ஐந்தாம் பாவம் பூர்வ புண்ணியம் ஆகையால் அதுதான் பூர்வ ஜென்ம தொடர்புகளை தரும். சூரியன் தொடர்பானால் ஆத்ம திருப்தி உண்டு. சிம்மம் வீடு தொடர்பானாலும் அந்த உபாசனையால் ஜாதகர் ஆத்ம திருப்தியடைவார்.

 இதில் இன்னும் ஆச்சரியங்களும் நுணுக்கங்களும் உள்ளன. ஜோதிடம் என்பது கடல் அதை கடந்து சென்று கொண்டே இருக்கலாம். பலன்களும் தீர்வுகளும் காலம் யார் யாருக்கு தரும்… என்னென்ன தரும் என்பதை காலமே முடிவு செய்கிறது என்பது மட்டும் நிதர்சனமான அனுபவ உண்மை.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!