கடக ராசியினருக்கு சேமிப்பில் இருந்த பணம் கை கொடுக்கும் - இன்றைய ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
1 year ago
கடக ராசியினருக்கு சேமிப்பில் இருந்த பணம் கை கொடுக்கும் - இன்றைய ராசிபலன்

மேஷம்

அசுவினி : எதிர்பார்த்த வரவு வரும். வியாபாரத்தை விரிவு செய்யும் முயற்சியை மேற்கொள்வீர். பரணி : பண வருவாயில் உண்டான தடை விலகும். சகோதரர்கள் உதவியுடன் ஒரு முயற்சி நிறைவேறும். கார்த்திகை 1 : ஒரு செயலில் லாபம் காண்பீர். விலகிச் சென்ற உறவினர்கள் உங்கள் உதவி கேட்டு வருவர்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4 : எதிர்பார்த்த பணம் வரும். கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். ரோகிணி : கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். நீண்டநாள் எண்ணம் நிறைவேறும். மிருகசீரிடம் 1,2 : நிதி நிலை சீராகும். வெளியில் இருந்து வரவேண்டிய பணம் உங்கள் கைக்கு வரும். 

மிதுனம்

மிருகசீரிடம் 3,4 : மனதில் தேவையற்ற குழப்பமும் செயலில் தடுமாற்றமும் ஏற்படும். நிதானமாக செயல்படுவது நல்லது. திருவாதிரை : நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியை நிறைவேற்ற முடியாமல் இன்று சங்கடப்படுவீர்கள். புனர்பூசம் 1,2,3: உங்கள் கவனச்சிதறலால் எதிர்பார்த்தவற்றில் எதிர்மறையான பலன்கள் உண்டாகும். 

கடகம்

புனர்பூசம் 4 : குடும்பத்தின் தேவைக்காக கடன் வாங்குவீர். யோசித்து செயல்பட வேண்டிய நாள். பூசம்: புதிய முயற்சி இன்று இழுபறியாகும். உதவி செய்வதாக சொன்னவர்கள் ஒதுங்கிப் போவார்கள். ஆயில்யம் : அத்தியாவசிய செலவு அதிகரிக்கும். சேமிப்பில் இருந்த பணம் கை கொடுக்கும். 

சிம்மம்

மகம் : புதிய முயற்சி லாபம் அளிக்கும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். வர வேண்டிய பணம் வரும். பூரம் : ஒரு சிலருக்கு புதிய வேலை அமையும். குடும்பத்தில் இருந்த சங்கடம் விலகும். உங்கள் எண்ணம் நிறைவேறும். உத்திரம் 1: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். பொன் பொருள் சேர்க்கை மகிழ்ச்சியை உண்டாக்கும். 

கன்னி

உத்திரம் 2,3,4 : நீங்கள் எதிர்பார்த்த ஆதாயம் இன்று ஏற்படும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி நிறைவேறும். அஸ்தம் : உத்தியோகத்தில் இருந்த பிரச்னைகளை சரி செய்வீர். மேலதிகாரியின் ஆதரவு உண்டாகும். சித்திரை 1,2 : ஊழியர்கள் உதவியால் உங்கள் தொழிலில் லாபம் அதிகரிக்கும். நெருக்கடி நீங்கும். 

துலாம்

சித்திரை 3,4 : பணியிடத்தில் உண்டான பிரச்னைகளை சரி செய்து நீங்கள் நினைத்ததை சாதிப்பீர். சுவாதி : மனக்குழப்பம் விலகும். நீங்கள் எதிர்பார்த்த உதவி சரியான நேரத்தில் கிடைக்கும். முயற்சி வெற்றியாகும். விசாகம் 1,2,3: உங்கள் முயற்சிகளை நிறைவேற்றிக்கொள்ள வேகமாக செயல்படுவீர். நண்பர்கள் உதவி நன்மை தரும். 

விருச்சிகம்

விசாகம் 4 : செயல்களில் தடைகளை சந்தித்தாலும் கவனமுடன் செயல்படுவதால் நன்மை அதிகரிக்கும். அனுஷம் : அலைச்சல் அதிகரிக்கும். பிரச்னை இன்று உங்களைத்தேடி வரும். யாரிடமும் வாக்கு வாதம் வேண்டாம். கேட்டை: வியாபாரத்தில் நெருக்கடிகளை சந்திப்பீர்கள். குறுக்குவழி செயல்களால் சங்கடம் தோன்றும். 

தனுசு

மூலம் : உங்கள் கனவு நிறைவேறும். புதிய வாகனம் வாங்குவதால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பூராடம் : வாழ்க்கைத் துணையுடன் ஏற்பட்ட பிரச்னை விலகும்.குடும்பத்தில் இருந்த குழப்பம் தீரும். உத்திராடம் 1 : நண்பர்கள் உதவியுடன் ஒரு செயலில் வெற்றி காண்பீர்கள். கூட்டுத்தொழில் லாபம் தரும். 

மகரம்

உத்திராடம் 2,3,4 : இறையருளால் எதிர்ப்பு விலகும். உங்கள் செயல்களில் சாதகமான நிலையைக் காண்பீர்கள். திருவோணம் : கேள்விக்குறியாகவே இருந்த ஒரு முயற்சி இன்று உங்களுக்கு சாதகமாகும். வருமானம் அதிகரிக்கும். அவிட்டம் 1,2 : துணிச்சலுடன் செயல்படுவீர். உங்கள் முயற்சிகளில் எதிர்பார்த்த லாபத்தைக் காண்பீர்கள். 

கும்பம்

அவிட்டம் 3,4 : பிள்ளைகளின் செயல்களால் குடும்ப உறவுகளிடம் மனக்கசப்பு ஏற்படும். அனுசரித்துச் செல்வது நல்லது. சதயம்: குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி குறையும். சொத்து விவகாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த நன்மை உண்டாகும். பூரட்டாதி 1,2,3: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளில் எதிர்பார்த்த நன்மை உண்டாகும். ஆதாயமான நாள். 

மீனம்

பூரட்டாதி 4 : உங்கள் பணியில் கவனம் செலுத்துவதால் நன்மை உண்டு. இல்லையெனில் சங்கடத்திற்கு ஆளாவீர். உத்திரட்டாதி : உடன் பணி புரிபவர்களால் சில சங்கடம் தோன்றும். நீங்கள் எதிர்பார்த்த ஒன்று இழுபறியாகும். ரேவதி : வெளியூர் பயணத்தால் உங்கள் விருப்பம் நிறைவேறும். எதிர்பார்த்த வரவு உண்டாகும்.