வாழ்வில் நாம் கடைப்பிடிக்க வேண்டியவைகள் பாகம் 01.
ஒவ்வொருவரும் தினமும் ஏழுமணி நேரம் தூங்க வேண்டும்;இதை விடவும் குறைவான மணிநேரம் தூங்கினால் மனமும்,உடலும் விரைவில் களைத்துப்போகும்;
அதைவிடவும் அதிகமான நேரம் தூங்கினால்,சோம்பேறித்தனத்தை நாம் வரவேற்கிறோம் என்று பொருள். அடுத்தவரை மனம் நோக வைத்தோ,அழ வைத்தோ,நமது அறிவாற்றலால் ஏமாற்றியோ அல்லது அதிகாரத்தைக் கொண்டு மிரட்டியோ பணம் சம்பாதிக்கக் கூடாது;
அப்படி சம்பாதிக்கும் பணம் பெருமளவு சேர்ந்ததும்,பதினைந்து ஆண்டுகளுக்குள் மொத்தமாக காணாமல் போய்விடும்;நாம் வாழ்க்கையில் செட்டிலாகிவிட்டோம் என்று முதுமையை வரவேற்கும்போது,இவ்வாறு சம்பாதித்தவர்களை வறுமை இறுக அணைத்துக் கொள்ளும்.
சட்டத்துக்குப்புறம்பாகவோ,தர்மத்துக்குப் புறம்பாகவோ பணம் குவித்தாலும்,அத்துடன் தீராத கர்ம நோயும் வந்துவிடும்;இப்படிப்பட்டவர்களுக்கு மிக நெருங்கிய நட்புவட்டாரத்தில் இவர்களின் கர்மநோயை குணப்படுத்தும் மருத்துவர்,முலிகை மருத்துவம் அல்லது மருந்துகள் இருக்கும்;
ஆனால்,அதை ஒருபோதும் நாம் அறிய முடியாது;அல்லது நம்பமாட்டோம்; ராகு மஹாதிசையில் அபூர்வமான ராகு மஹாதிசையும்,தர்மகர்மாதிபதி திசையும்,யோகம் தரும் கிரகத்தின் திசையும் ஒருவரது பிறந்த ஜாதகப்படி அல்லது அவரது மகன்/ள் பிறந்த ஜாதகப்படியோ வந்தால் அவர்கள் குறுகிய காலத்தில் பெரும் செல்வச் செழிப்பை அடைந்துவிடுவார்கள்.
அப்படிப்பட்ட செல்வச் செழிப்பு மட்டுமே நிலைக்கும்.யோகம் தரும் சனி மஹாதிசை வந்தால்,நிரந்தரமான சொத்துக்களை வாங்க வைக்கும்;அந்த சொத்துக்களை மூன்று தலைமுறைகள் வரை அடமானம் கூட வைக்கமுடியாது;
இதையெல்லாம் அனுபவம் மிக்க ஜோதிடர்கள் மூலமாக மட்டுமே அறிந்து கொள்ள முடியும்.