கும்ப ராசியினருக்கு எண்ணத்திற்கு மாறாக சில செயல் நடைபெறும் - இன்றைய ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
1 year ago
கும்ப ராசியினருக்கு எண்ணத்திற்கு மாறாக சில செயல் நடைபெறும் - இன்றைய ராசிபலன்

மேஷம்

அசுவினி: எதிர்பார்த்த வருவாய் வந்து சேரும். சொத்து வாங்க மேற்கொண்ட முயற்சி நிறைவேறும். பரணி: வெளியூர் பயணம் ஆதாயம் தரும். புதிய நண்பர்கள் விஷயத்தில் எச்சரிக்கை அவசியம். கார்த்திகை 1: கவனமாக செயல்படுவீர்கள். வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் உண்டாகும்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகளை சரி செய்வீர்கள். நண்பர்களின் உதவி நன்மை தரும். ரோகிணி: பணியாளர்களுக்கு எதிர்பார்த்த செய்தி வந்து சேரும். சிலருக்கு புதிய பொறுப்பு உண்டாகும். மிருகசீரிடம் 1,2: போட்டிகளை சமாளித்து வியாபாரத்தில் வெற்றி காண்பீர்கள். நிதிநிலை உயரும்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி நன்மையாகும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். திருவாதிரை: விஐபிகள் ஆதரவுடன் நினைத்ததை முடிப்பீர்கள். கோயிலுக்கு சென்று வருவீர்கள். புனர்பூசம் 1,2,3: தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். பழைய கடன்களை அடைத்து நிம்மதி அடைவீர்கள்.

கடகம்

புனர்பூசம் 4: நேற்றிருந்த பிரச்னைகள் தீரும். செயல்களில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். பூசம்: நினைத்த செயல்களை நிறைவேற்ற முடியாமல் போகும். குழப்பம் அதிகரிக்கும். வருமானம் இழுபறியாகும். ஆயில்யம்: செயல்களில் கூடுதல் கவனம் தேவைப்படும். மற்றவரிடம் வீண் விவாதங்கள் வேண்டாம்.

சிம்மம்

மகம்: உங்கள் முயற்சிகள் எளிதாக நிறைவேறும். வருமானம் உயரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பூரம்: நண்பர்கள் உதவியுடன் உங்கள் எண்ணம் நிறைவேறும். வரவேண்டிய பணம் வந்து சேரும். உத்திரம் 1: புதிய முயற்சி ஒன்றில் ஈடுபட்டு லாபம் காண்பீர்கள். வாழ்க்கைத் துணையின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.

கன்னி

உத்திரம் 2,3,4: எதிரிகள் விலகிச் செல்வார்கள். உங்கள் முயற்சியில் நீங்கள் எதிர்பார்த்த ஆதாயம் உண்டாகும். அஸ்தம்: உறவினர்களால் உண்டான பிரச்னைகள் தீரும். குடும்பத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். சித்திரை 1,2: வியாபார வளர்ச்சியில் அக்கறை செலுத்துவீர்கள். மறைமுகத் தொல்லைகள் விலகும்.

துலாம்

சித்திரை 3,4: குழந்தைகள் வளர்ச்சியில் அக்கறை செலுத்துவீர்கள். எதிர்பார்த்த வருவாய் வந்து சேரும். சுவாதி: வழக்கமான செயல்களில் நன்மை உண்டு. விலகிச்சென்ற உறவினர்கள் உங்களைத் தேடி வருவார்கள். விசாகம் 1,2,3: சாமர்த்தியமாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். உங்கள் செல்வாக்கு உயரும்.

விருச்சிகம்

விசாகம் 4: தாய்வழி உறவினர்கள் ஆதரவுடன் முயற்சியில் வெற்றி அடைவீர்கள். உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். அனுஷம்: தொழிலில் இருந்த தடைகள் விலகும். வருமானம் அதிகரிக்கும். உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். கேட்டை: சொத்து வகையில் உண்டான பிரச்னையில் உங்களுக்கு சாதகமான நிலை உண்டாகும்.

தனுசு

மூலம்: சகோதரர்களுடன் ஏற்பட்ட பிரச்னைகள் சரியாகும். குடும்பத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். பூராடம்: அலுவலகத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். வருவாய் அதிகரிக்கும். உத்திராடம் 1: வியாபாரத்தில் புதிய அணுகுமுறையைக் கையாளுவீர்கள். நண்பர்களின் ஒத்துழைப்பு உண்டு.

மகரம்

உத்திராடம் 2,3,4: நீங்கள் எதிர்பார்த்த வருமானம் இன்று வரும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் தீரும். திருவோணம்: வருமானத்தில் இருந்த தடைகள் விலகும். சொத்து வாங்கும் முயற்சி நிறைவேறும். அவிட்டம் 1,2: நீங்கள் எதிர்பார்த்த செய்தி வந்து சேரும். குடும்பத்தில் உண்டான நெருக்கடி நீங்கும்.

கும்பம்

அவிட்டம் 3,4: மனக்குழப்பம் அதிகரிக்கும். திட்டமிட்டு செயல்படுவதால் முயற்சி வெற்றியாகும். சதயம்: குடும்பத்தில் தேவையற்ற பிரச்னை உண்டாகும். உங்கள் எண்ணத்திற்கு மாறாக சில செயல் நடைபெறும். பூரட்டாதி 1,2,3: எதிர்பார்ப்புகள் நிறைவேறும் என்றாலும், கவனமுடன் செயல்பட வேண்டிய நாள்.

மீனம்

பூரட்டாதி 4: அலைச்சல் கூடும். எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும் என்பதால் செயல்களில் கவனம் தேவை. உத்திரட்டாதி: அலுவலகத்தில் வேலைப்பளு உண்டாகும். மறைமுக எதிரிகளால் மனதில் சங்கடம் தோன்றும். ரேவதி: உங்கள் செயல்களில் நெருக்கடியான நிலை ஏற்படும். நினைப்பது ஒன்று நடப்பது வேறாக இருக்கும்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!