கடக ராசியினருக்கு வெளி வட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும் - இன்றைய ராசிபலன்

மேஷம்:
அசுவினி : போட்டியாளரால் சங்கடம் அதிகரிக்கும் என்றாலும் உங்கள் விருப்பம் நிறைவேறும். வரவு அதிகரிக்கும். பரணி : நட்புகளால் அனுகூலம் அடைவீர். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர். முயற்சி பலிதமாகும். கார்த்திகை 1 : புதிய முயற்சிகளை ஒத்தி வைப்பது நல்லது. வியாபாரத்தில் உண்டான தடை விலகும்.
ரிஷபம்:
கார்த்திகை 2,3,4 : செயல்களில் தடுமாற்றம் உண்டாகும் என்றாலும் சமாளித்து வெற்றி அடைவீர்கள். ரோகிணி : நேற்றுவரை இருந்த குழப்பம் நீங்கும். தேவைகளை நிறைவேற்ற புதிய வழிமுறைகளைக் கையாள்வீர். மிருகசீரிடம் 1,2 : மதியத்திற்கு மேல் நிலைமை சீராகும். சிந்தித்து செயல்படுவதால் நன்மை அதிகரிக்கும்.
மிதுனம்:
மிருகசீரிடம் 3,4 : புதிய முயற்சி இன்று வேண்டாம். மனதில் குழப்பம் அதிகரித்தாலும் உங்கள் தேவைகளை அடைவீர்கள். திருவாதிரை : பண வரவில் இருந்த தடை நீங்கும். மதியத்திற்கு மேல் நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். புனர்பூசம் 1,2,3 : நேற்றைய பிரச்னை ஒன்றுக்கு தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் இருந்த நெருக்கடி நீங்கும்.
கடகம்:
புனர்பூசம் 4 : காலையில் உங்கள் முயற்சிகளில் ஆதாயம் காண்பீர். உங்கள் எண்ணம் நிறைவேறும்நாள். பூசம் : உங்கள் செயல்களால் வெளி வட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். விஐபிகள் ஆதரவால் ஒரு முயற்சி நிறைவேறும். ஆயில்யம் : தொழிலில் இருந்த தடைகளை சரி செய்வீர். எதிர்பாராத வரவால் மகிழ்ச்சி அடைவீர்கள்.
சிம்மம்:
மகம் : வியாபாரத்தில் போட்டி அதிகரிக்கும்.உங்கள் அணுகுமுறையால் வருமானத்தில் உண்டான பிரச்னை தீரும். பூரம் : எதிர்பார்த்த வரவு வரும். இழுபறியாக இருந்த வேலையும் குடும்பத்தில் ஒருவரின் தேவையும் நிறைவேறும். உத்திரம் 1 : பிரபலங்களை சந்தித்து அதன் வழியே சில வேலைகளை முடிப்பீர்கள். பலரின் மதிப்பினை பெறுவீர்கள்.
கன்னி:
உத்திரம் 2,3,4 : திட்டமிட்டிருந்த வேலைகள் நடந்தேறும். எதிர்பார்த்த உதவி தக்க சமயத்தில் வரும். அஸ்தம் : நீங்கள் ஈடுபடும் வேலையில் சில தடைகள் உண்டானாலும் இறுதியில் உங்கள் முயற்சி வெற்றியாகும். சித்திரை 1,2 : உங்கள் செயல்களில் உண்டான தடை பெரியவர்களின் ஆதரவால் சரி செய்வீர்.
சித்திரை 3,4: நேற்றுவரை இருந்த நெருக்கடி நீங்கும். பண வரவில் இருந்த தடைகள் விலகி நன்மை அடைவீர்கள். சுவாதி : உங்கள் முயற்சி இன்று வெற்றியாகும். தடைகளை விலக்கி ஆதாயம் காண்பீர். லாபம் அதிகரிக்கும். விசாகம் 1,2,3 : எதிர்பாராத பிரச்னை இன்று உங்களைத் தேடிவரும். வம்பு வழக்கு தோன்றும்.
விருச்சிகம்:
விசாகம் 4 : உங்கள் முயற்சியில் மதியத்திற்கு மேல் சங்கடங்களை சந்திப்பீர்கள். கவனமாக செயல்பட வேண்டிய நாள். அனுஷம் : எதிர்பார்ப்பு இழுபறியாகும். குடும்பத்தில் நெருக்கடி அதிகரிக்கும். புதிய முயற்சிகள் இன்று வேண்டாம். கேட்டை : முயற்சிக்கேற்ற லாபத்தை அடைவீர்கள். இன்று நீங்கள் ஈடுபடும் செயல் நிலைத்து நீடித்து நிற்கும்.
தனுசு:
மூலம் : இழுபறியாக இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். நினைத்ததை துணிச்சலுடன் செய்து முடிப்பீர்கள். பூராடம் : அலுவலகத்தில் மதிப்பு அதிகரிக்கும். திட்டமிட்டு செயல்பட்டு உங்கள் முயற்சியில் வெற்றி காண்பீர்கள். உத்திராடம் 1 : உற்சாகமுடன் செயல்படுவீர். வரவு அதிகரிக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த தகவல் வரும்.
மகரம்:
உத்திராடம் 2,3,4 : உழைப்பு அதிகரிக்கும். முயற்சியினால் எண்ணம் நிறைவேறும். மறைமுகமாக தொல்லை விலகும். திருவோணம் : சொத்துகளில் இருந்த பிரச்னை மீண்டும் தலை எடுக்கும். உறவினரால் சங்கடம் தோன்றும். அவிட்டம் 1,2 : செலவுகள் செய்தும் நினைத்ததை சாதிக்க முடியாமல் சோர்வு அடைவீர். வரவு இழுபறியாகும்.
கும்பம்:
அவிட்டம் 3,4 : எதிர்பாராத சங்கடம் தோன்றும். உறவினர், வியாபாரத்தில் உண்டான தடை விலகும். சதயம் : உங்கள் செயல்களில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். பூரட்டாதி 1,2,3 : தொழில் ரீதியாக சில முயற்சிகளை மேற்கொள்வீர். பெரியவர்களின் ஆதரவால் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
மீனம்:
பூரட்டாதி 4 : நீண்டநாள் பிரச்னை ஒன்றுக்கு முடிவு காண்பீர். நீங்கள் ஈடுபடும் செயல்களில் வெற்றி உண்டாகும்.
உத்திரட்டாதி : அலுவலகத்தில் தேவையற்ற பிரச்னை தோன்றி உங்களுக்கு சங்கடத்தை உண்டாக்கும்.
ரேவதி : மதியம் வரை உங்கள் முயற்சிகள் இழுபறியாக இருந்தாலும் அதன்பின் நிலைமை சீராகும்.



