ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் உடனடியாக பணிக்குத் திரும்புமாறு அறிவிப்பு!

#SriLanka #Protest #strike #Railway
PriyaRam
9 months ago
ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் உடனடியாக பணிக்குத் திரும்புமாறு அறிவிப்பு!

இலங்கை ரயில்வே உப கட்டுப்பாட்டாளர்களின் விடுமுறைகள் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய இன்று நண்பகல் 12.00 மணிக்கு முன்னர் அனைத்து உப கட்டுப்பாட்டாளர்களும் பணிக்கு சமூகமளிக்குமாறும் அவர் தெரிவித்துள்ளார்.

 மாளிகாவத்தை ரயில் வீதியின் நுழைவாயிலில் வைத்து ரயில்வே பாதுகாப்பு உத்தியோகத்தர், உப கட்டுப்பாட்டாளர் ஒருவரை தாக்கியதை அடுத்து, ரயில்வே உப கட்டுப்பாட்டாளர்கள் நேற்று முதல் பணி புறக்கணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.