வெளியூர் பயணத்தை ஒத்தி வைக்கவேண்டிய ரிஷப ராசியினர் - இன்றைய ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
6 months ago
வெளியூர் பயணத்தை ஒத்தி வைக்கவேண்டிய ரிஷப ராசியினர் - இன்றைய ராசிபலன்

மேஷம்

அசுவினி: நீங்கள் செய்து வரும் வியாபாரம் விருத்தியாகும். புதிய முயற்சியை ஒத்தி வைப்பது நன்மையாகும். பரணி: நண்பர்கள் உதவியால் உங்கள் எண்ணம் பலிதமாகும். அரசியல் வாதிகளின் செல்வாக்கு உயரும். கார்த்திகை 1: வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையால் உங்கள் செயல் நிறைவேறும்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: உங்கள் முயற்சி இழுபறியாகும். வெளியூர் பயணத்தை ஒத்தி வைப்பீர்கள். ரோகிணி: விவேகமுடன் செயல்பட்டு திட்டமிட்ட செயலை முடிப்பீர்கள். எதிர்பார்த்த செய்தி வரும். மிருகசீரிடம் 1,2: வெளி வட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். கடன்களை அடைப்பீர்கள்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: எதிர்பாராத நெருக்கடிகளை சந்தித்தாலும் உங்கள் முயற்சியில் வெற்றி காண்பீர்கள். திருவாதிரை: எங்கு சென்றாலும் எதிர்ப்புகள் தோன்றும். உதவி புரிவதாக சொன்னவர்கள் காணாமல் போவார்கள். புனர்பூசம் 1,2,3: அலைச்சல் அதிகரிக்கும். திடீர் பயணம் ஏற்படும். குடும்பத்தில் சல சலப்புகள் தோன்றி மறையும்.

கடகம்

புனர்பூசம் 4: வாழ்க்கைத் துணையின் உதவியுடன் தள்ளிப்போன ஒரு செயலை நடத்த முயல்வீர்கள். பூசம்: நண்பரிடம் ஏற்பட்ட பிரச்சினைகள் முடிவிற்கு வரும். வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். ஆயில்யம்: உங்கள் விருப்பங்கள் இன்று எளிதாக நிறைவேறும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும்.

சிம்மம்

மகம்: உங்கள் செல்வாக்கு இன்று வெளிப்படும். நீண்ட நாள் பிரச்சினை ஒன்று முடிவிற்கு வரும். பூரம்: மனதில் இருந்த குழப்பங்கள் விலகும். உடல் நிலையில் இருந்த சங்கடம் நீங்கும். உத்திரம் 1: மறைமுகத் தொல்லை தீரும். அரசியல்வாதிகள் உற்சாகமுடன் செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள்.

கன்னி

உத்திரம் 2,3,4: குல தெய்வ அருளால் முயற்சியில் வெற்றி காண்பீர்கள். பொருளாதார நிலை உயரும். அஸ்தம்: உறவினர்கள் உதவியுடன் எதிர்ப்புகளை வெல்வீர்கள். உங்கள் செல்வாக்கு உயரும். சித்திரை 1,2: எதிர்பாராத வருவாய் வந்து சங்கடங்களை நீக்கும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் தீரும்.

துலாம்

சித்திரை 3,4: நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். உங்கள் செல்வாக்கு இன்று மற்றவர்களுக்கு தெரியவரும். சுவாதி: நீண்ட நாள் சங்கடங்கள் விலகும். வருமானம் அதிகரிக்கும். தாய்வழி உறவுகளின் ஆதரவு அதிகரிக்கும். விசாகம் 1,2,3: சிலருக்கு வாழ்க்கைத் துணையின் ஆதரவால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

விருச்சிகம்

விசாகம் 4: உங்கள் செயல்களுக்கு சகோதரர்கள் உதவியாக இருப்பார்கள். வரவு செலவில் கூடுதல் கவனம் தேவை. அனுஷம்: எதிர்பார்த்த வருவாய் வந்து சேரும். குடும்பத்தினர் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். கேட்டை: உங்கள் செல்வாக்கு இன்று வெளிப்படும். நீங்கள் விரும்பியவற்றில் வெற்றி காண்பீர்கள்.

தனுசு

மூலம்: எதிர்பார்த்த வரவு உண்டு. குடும்பத்தினரை ஆலோசித்து முயற்சிகளை மேற்கொள்வது நன்மையாகும். பூராடம்: நண்பர்கள் உதவியால் ஆதாயம் காண்பீர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். உத்திராடம் 1: எதிர்பார்த்த வரவுகளால் செலவுகளை சமாளிப்பீர்கள். உங்கள் அந்தஸ்து உயரும்.

மகரம்

உத்திராடம் 2,3,4: மனதில் இனம் புரியாத குழப்பம் ஏற்படும். செயலில் கவனம் செலுத்த முடியாத நிலை உண்டாகும். திருவோணம்: மனம் விரும்பும் வகையில் செயல்படுவீர்கள். வரவு ஒரு பக்கம் என்றால் அதற்கேற்ற செலவும் ஏற்படும். அவிட்டம் 1,2: நினைத்ததை அடைய வேண்டுமென்று துணிச்சலுடன் செயல்படுவீர்கள்.

கும்பம்

அவிட்டம் 3,4: குடும்பத்திற்காக திடீர் செலவுகள் ஏற்படும். முயற்சிகளில் தடையும் தாமதமும் ஏற்படும். சதயம்: குடும்பத்தினர் விருப்பத்தை பூர்த்தி செய்ய முடியாமல் சங்கடத்திற்கு ஆளாவீர்கள். வரவை விட செலவு கூடும். பூரட்டாதி 1,2,3: எதிர்பார்த்த வருமானம் வந்தாலும் தேவையற்ற செலவுகள் ஏற்படும். 

மீனம்

பூரட்டாதி 4: மனதில் இருந்த சங்கடம் விலகும். எதிர்பாராத வருமானத்தால் நெருக்கடிகள் நீங்கும். உத்திரட்டாதி: வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் நீங்கும். புதிய நண்பர்களால் உங்கள் எண்ணம் நிறைவேறும். ரேவதி: அந்நியர் வழியே ஆதாயம் அதிகரிக்கும். அக்கம் பக்கத்தினரிடம் ஏற்பட்ட பிரச்சினை நீங்கும்.