ராகு, கேது பெயர்ச்சி பலன்கள் மேஷம், ரிஷபம் மற்றும் மிதுன ராசிகளுக்கு 2023 இல் எப்படி?

இன்று மாலை வேளையில் ராகு கேது பெயர்ச்சி ஆகி ராகு பகவான் மீனத்திற்கும் கேது பகவான் கன்னிக்கும் செல்கின்றர்கள். அவர்களை போற்றி வணங்குவோம்.
மேஷ ராசி:
கண்ணுக்கு தெரியாமல் உபத்ரவம் கொடுக்கும் உடல் உபாதைகள் மற்றும் குட்டி குட்டி எதிர்ப்புகள் வழக்குகள் உருவாகி, விலகிப் போகும்.வெளிநாடு பயணம் கை கூடும். லாவகரி வாஸ்துகள் உபயோகிக்கும் நபர்கள் அலர்ஜி நோயினால் அவதிப்படுவார்கள்.
கண்ணுக்கு தெரியாத சிறிய நீர்கட்டிகள் வயிற்றில் வந்து உபாதை அளித்து மருத்துவத்தில் நீங்கும். குழந்தை பிறப்பு தள்ளிப்போக்கும். பயப்படவேண்டாம் குரு பார்வை கை கொடுக்கும்.
ஆலங்குடி குருவை இறுக பற்றிக் கொள்ளுங்கள். கனகா புஷ்பராகம் அணியலாம். நன்மை பயக்கும்.
ரிஷப ராசி :
எதிர் பாராத வெற்றிகள் உங்கள் காலடியில் வந்து குவியும். குழந்தைகள் சம்பந்தப்பட்ட மனக் கவலை அவ்வப்போது வந்து விலகும். யூக வணிகம் சக்கை போடு போடும்.
அடிச்சு விளையாடுங்க. சனி பகவானும் மீனத்துக்கு வந்துட்டா, கேட்கவே வேண்டாம். உற்றார் மற்றும் உறவினர், நண்பர்களுக்கு, உபயோகமாக இருந்து எல்லோருடைய ஆசிர்வாதத்தையும் பெற்றுக்கொண்டே, இருங்கள்.
அது உங்களை எல்லாவிதத்திலும் காக்கும். குலதெய்வத்தின் அருளை முழுமையாக பெறுங்கள். வெற்றி நிச்சயம்.
மிதுனம் ராசி:
பத்தாம் இடத்துக்கு செல்லும் ராகு உங்களை கடுமையாக உழைக்கச் செய்யும். ஊழிப்பின் பயனை முழுமை அடையச் செய்யாமல், உடல் உபாதை ஓய்வு எடுக்க தூண்டும். இருதயத்தை பராமரித்துக்கொள்ளுங்கள். வீடு நிலம் சம்பந்தப்பட்ட பிரச்னை இழுபறி ஆகும். தாயார் மற்றும் சம்பந்தட்ட உறவினர் பிரச்சனைகள் தோன்றி மறையும்.
சிலர் தாய்வழி கர்மாக்கள் செய்வார்கள். வாகன பயணத்தில் ஜாக்கிரதை அவசியம். பள்ளிகள் கல்விக் கூடங்கள் நடுத்துபவர்கள், பணியாற்று பவர்கள், கவனமாக இருத்தல் அவசியம். தொழில் சம்பந்தப்பட்ட, வரி ஏய்ப்பு வழக்கு உங்களை அச்சுருத்தும். குரு பார்வை காப்பாற்றி விடும். குருவை இறுக பற்றிக்கொள்ளுங்கள்.
தொடர் ராசிகள் அப்புறம் பார்ப்போம்.
அனுதினமும் ஜோதிடத்தை சுவாசித்து யோசிப்போம்.
ஜோதிடம் முறைப்படி கற்போம். கற்பிப்போம். அன்றாட வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு ஜோதிடம் கொண்டு தீர்வு காண்போம்.
மேலதிக ஜோதிட தேவைகளுக்கு
Dr.Navasakthi Sundarjee
0091 99941 81293



