பிரான்ஸில் வெள்ள அனர்த்தத்திற்காக சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
#France
#Warning
#Flood
#வெள்ளம்
#லங்கா4
#பிரான்ஸ்
#France Tamil News
#Tamil News
Mugunthan Mugunthan
2 years ago
நேற்று வெள்ளிக்கிழமை பா-து-கலே மாவட்டத்துக்கு வெள்ள அனர்த்தம் காரணமாக ‘சிவப்பு’ எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், இன்று சனிக்கிழமையும் அங்கு எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.
பா-து-கலே மாவட்டத்தில் 1 நாட்களுக்குரிய மழை கடந்த 24 மணிநேரத்தில் பெய்துள்ளது. தீயணைப்பு படையினர் இதுவரை 50 இற்கும் மேற்பட்ட மீட்புப்பணியினை மேற்கொண்டுள்ளனர்.

அங்கு விரைவில் இயற்கை பேரிடர் நிலை அறிவிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்பட்டுள்ளது. இந்த வெள்ள அபாயம் காரணமாக இன்று சனிக்கிழமையும் ‘சிவப்பு’ எச்சரிக்கையே விடுக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, பா-து-கலேயுடன் Charente-Maritime, Nord மற்றும் Vendée ஆகிய மாவட்டங்களுக்கும் எச்சரிக்கை (செம்மஞ்சள்) விடுக்கப்பட்டுள்ளது.